சந்தோஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, நயன்தாரா தற்போது நடித்து வரும் படம் நானும் ரவுடிதான்.
இந்த படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன், ராதிகா, ஆர்.ஜே.பாலாஜி, ஆனந்த்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபத்திரத்தில் நடித்து வருகின்றனர். தற்போது இவர்களுடன் பார்த்திபனும் இணைந்துள்ளார்.
தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் மாஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் பார்த்திபன், தற்போது ‘நானும் ரௌடிதான்’ படத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடிப்பது ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
|