பீட்சா, ஜிகிர்தண்டா ஆகிய படங்களைத் தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து உருவாக இருக்கும் படம் இறைவி. இந்த படத்தை சி.வி.குமாரின் திருகுமார் எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க, இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார்.
சிறந்த பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா என மூவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. படத்திற்கு மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
|