ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாக்கி வரும் படம் உத்தமவில்லன்.
இந்த படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாக ஆண்ட்ரியா, பூஜா குமார் நடித்துள்ளார்கள்.
உத்தமவில்லன் படத்தின் கதை, திரைக்கதையை கமலஹாசனே எழுதியுள்ளார். ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இரண்டு காலக்கட்டங்களில் நடைபெறும் சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயராம், நாசர், இயக்குனர் கே.பாலச்சந்தர், கே.விஸ்வநாத், பார்வதி மேனன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தை வரும் நவம்பர் 7-ந் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
|