ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல்ஹாசன், கே.பாலசந்தர், கே.விஸ்வநாத், ஆண்ட்ரியா, பூஜா, ஊர்வசி ஆகியோர் நடித்துள்ள படம் உத்தம வில்லன்.
இந்த படத்தை லிங்குசாமி, கமலுடன் இணைந்து தயாரித்திருக்கிறார். ‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்.
இந்தப் படத்துக்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரையுலகினர் பலர் கலந்து கொண்டனர்.
உத்தம வில்லன் படத்தில் மொத்தம் ஏழு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதில் ஐந்து பாடல்களை கமல் எழுதியோடு மட்டுமல்லாமல் 6 பாடல்களை பாடவும் செய்துள்ளார்.
அதன் விவரம்..
1. லவ்வா லவ்வா எனும் பாடலை விவேகா எழுத கமல் ஹாசன், சரண்யா கோபிநாத், அனித்தா, நிவாஸ் பாடியுள்ளனர்.
2. காதலாம் கடவுள் முன் எனும் பாடலை கமல் ஹாசன் எழுத பத்மலதா பாடியிருக்கிறார்.
3. உத்தமன் அறிமுகம்(வில்லுப்பாட்டு) எனும் பாடலை கலைமாமணி கவிஞர் சுப்பு ஆறுமுகம் எழுத கமலும், சுப்பு ஆறுமுகமும் பாடியுள்ளனர்.
4. சாகாவரம் எனும் பாடலை கமல் ஹாசன் எழுதி அவரே பாடியுள்ளார்.
5. இரணியன் நாடகம் எனும் பாடலை கமல் ஹாசன் எழுத ருக்மிணி அசோக் குமுர், கமல் ஹாசன் ஆகியோர் பாடியுள்ளனர்.
6. முத்தரசன் கதை எனும் பாடலை கமல் ஹாசன் எழுத யாசின் நிசார், ரஞ்சித், ஐயப்பன், பத்மலதா, கமல் ஹாசன் பாடியுள்ளனர்.
7. உத்தமன் கதை எனும் பாடலை கமல் ஹாசன் எழுத எம்.எஸ். பாஸ்கர், யாசின் நிசார், ரஞ்சித், ஐயப்பன், கமல் ஹாசன் ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர்.
உத்தம வில்லன் திரைப்படம் வரும் ஏப்ரல் 2ம் தேதி திரைக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
|