விஸ்வரூபம் படத்தை தொடர்ந்து நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் உத்தம வில்லன்.
இந்த படத்தை கமலின் நண்பரும், நடிகருமான ரமேஷ் அரவிந்த் இயக்கியுள்ளார். இந்த படத்தில் கமலுடன் சேர்ந்து, மறைந்த இயக்குனர் சிகரம் பாலச்சந்தர், ஜெயராம், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதி, ஊர்வசி, நாசர் என பல திரை பிரபலங்கள் நடித்துள்ளனர்.
இரண்டு விதமான காலக்கட்டத்தில் பயணிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.
இந்த படத்தின் படபிடிப்புகள் அனைத்தும் முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்க்ஷன் வேலைகள் நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில் உத்தமவில்லன் படத்தின் இசை வெளியீட்டு விழா மார்ச் 1ம் தேதி நடைபெற இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தம வில்லன் திரைப்படம் வரும் கோடை விடுமுறையை ஒட்டி ஏப்ரலில் ரிலீசாகிறதாம்.
|