LOGO
  முதல் பக்கம்    சினிமா    சினிமா செய்திகள் Print Friendly and PDF

மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!

நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல், இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துவரும் படம் உத்தம வில்லன்.

இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக ஆண்ட்ரியாவும், பூஜா குமார் நடிக்கின்றனர். இவர்களுடன் இயக்குனர்கள் கே.பாலசந்தரும், கே.விஸ்வநாத்தும் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்

‘உத்தம வில்லன்’ திரைப்படத்தில், ‘உத்தமன்’ என்ற 8-ம் நூற்றாண்டு கூத்துக் கலைஞன் கதாபாத்திரத்திலும், மனோரஞ்சன் என்ற 21-ம் நூற்றாண்டின் சினிமா உச்ச நட்சத்திரமாக மற்றொரு கதாபாத்திரத்திலும் என இரு வேடங்களில் நடிக்கிறார் கமல்ஹாசன்.

இந்த படத்தை லிங்குசாமி தயாரிக்கிறார். இந்த படத்தின் இசைவெளியீடு சமீபத்தில் தான் நடந்தது. ரஜினிகாந்தின் லிங்கா வெளியீடு உரிமையை வாங்கிய ஈராஸ் நிறுவனமே தற்போது கமல்ஹாசனின் உத்தம வில்லன் வெளியீடு உரிமையை வாங்கி உள்ளது.

உத்தம வில்லன் வருகிற ஏப்ரல் 2 தேதி வெளியாகும் என்று ஈராஸ் நிறுவனம் அறிவித்து இருந்தது. இந்த நிலையில் உத்தம வில்லன் வெளியீடு தள்ளிப்போகிறது என தகவல் வெளியாகி உள்ளது.

தயாரிப்பாளர் ஏப்ரல் 2 ந்தேதி வெளியிடுவதாக இருந்த தேதியை ஏப்ரல் 10 என தள்ளி வைத்தார். ஆனால், தற்போது சென்சார் பணிகள் இன்னும் முடிவடையாத காரணத்தில், ஏப்ரல் 10ம் தேதி வெளியாக வாய்ப்பில்லை என தெரிகிறது.

'உத்தம வில்லன் படத்தை அமெரிக்காவில் வெளியிடும் ப்ரைம் மீடியா நிறுவனத்தினர் "உத்தம வில்லன் 10ம் தேதி வெளியாகவில்லை. வெளியீட்டு தேதி சென்சார் பணிகள் முடிந்ததும் அறிவிக்கப்படும்" என்று ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்கள்.

சென்சார் பணிகள் தற்போது நடைபெற்று வருவதால், அனேகமாக ஏப்ரல் 17 அல்லது ஏப்ரல் 24ம் தேதி உத்தம வில்லன் வெளியாகும் எனத் தெரிகிறது.

by Swathi   on 31 Mar 2015  0 Comments
Tags: உத்தம வில்லன் ரிலீஸ்   உத்தம வில்லன்   கமல் ஹாசன்   Uttama Villain   Uttama Villain Release   Kamal Hassan   Uthama Villain Release Postponed  
 தொடர்புடையவை-Related Articles
கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா? கமலின் அடுத்த படம் யாருடன் தெரியுமா?
ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்? ஜூலையில் ரிலீஸ் ஆகிறது பாபநாசம்?
அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன் அவன் அப்படித்தான் அந்த உத்தம வில்லன்
மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !! மீண்டும் தள்ளிப்போகிறது உத்தம வில்லன் ரிலீஸ் !!
கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !! கமலிடம் மன்னிப்பு கேட்ட அமீர்கான் !!
ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !! ரசிகர்கள் பாதி பணத்தை கேட்டால் திருப்பி தருவார்களா - கமல் !!
பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ? பிகே ரீமேக் மூலம் இணைவார்களா கமல், ரஜினி ?
பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !! பிரபு தேவா இயக்கத்தில் மர்மமாக மறைந்த மலேசிய விமான கதையில் நடிக்கிறாராம் கமல் !!
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.