மனைவிக்காக, சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
நியூயார்க்கில். ஐக்கிய நாடுகள் சபையின் பொது கூட்டம் நடை பெற்றுவருகிறது. இந்த பொது கூட்டத்தில், கலந்து கொண்ட அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்த ஐ.நா., அதிகாரி, ஒருவர் சிகரெட் வேண்டுமா என, கேட்க, அதற்கு புன்னகையுடன் மறுத்த ஒபாமா, நான், கடந்த ஆறு ஆண்டுகளாக சிகரெட் வைத்து கொள்வதில்லை. மனைவிக்கு பயந்து புகைப்பதை விட்டு விட்டேன், என பதிலளித்தார்.அமெரிக்க அதிபராக, ஒபாமா பொறுப்பேற்ற புதிதில், அவர் ஓயாமல் சிகரெட் புகைத்து கொண்டிருந்தார். இவரது இந்த பழக்கம், பத்திரிகைகளில் பரபரப்பு செய்தியாக வெளிவந்தது. ஒபாமாவின் மனைவி மிச்சேல், உடல் பருமனை குறைக்கும் அமைப்பு ஒன்றை நடத்தி வருகிறார். இதற்காக அவர், பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து, உடல்நலன் குறித்த அறிவுரைகளை வழங்கி வருகிறார். இந்த விஷயத்தில் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக இருக்க வேண்டும் என்பதற்காக ஒபாமா, புகைக்கும் பழக்கத்தை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.
|