நானும் ரௌடி தான் படத்தின் வெற்றியை தொடர்ந்து, மீண்டும் விஜய் சேதுபதியுடன் இணைந்து விக்னேஷ் சிவன் பணியாற்றப்போவது ஏற்கெனவே உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இவர்கள் இணையும் அந்த புதிய படத்திற்கு காத்துவாக்குல ரெண்டு காதல் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கவிருக்கிறார்.
இந்த படத்தின் தலைப்பை வைத்துப் பார்க்கும்போது இதில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கப் போகிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அதனால், இரண்டு பிரபல கதாநாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.
நானும் ரவுடிதான் படத்தை போலவே இந்த படமும் நகைச்சுவை மற்றும் காதல் கலவை நிறைந்திருக்கு என எதிர்பார்க்கப்படுகிறது.
|