நகைச்சுவைகளையயும், காதலையும் மையமாகக் கொண்டு உருவாக்கி வரும் திரைப்படம் ஓ ஹோ. இந்த படத்தை பாய்ஸ் கம்பெனி தயாரிக்கிறது. கதையின் நாயகனாக "லக்கிஸ்டார்" அறிமுகமாகி நடிக்கின்றார். இவருக்கு ஜோடியாக "சொளந்தர்யா" நடிக்கின்றார். இவர்களுடன் சாப்ளின் பாலு, போண்டாமணி, பெஞ்சமின், சுஸ்மிதா ஆகியோர் நடிக்கின்றனர்.
கடவுள் முருகன் இந்த படத்திற்கு இசை அமைக்கிறார்.
இந்த படத்தை பாலு தேவன் என்பவர் எழுதி இயக்குகிறார்.
படத்தின் இயக்குனர் படம் பற்றி கூறும்போது, நாற்பது வயது வரை பணத்தையே குறிக்கோளாக இருந்தவர், அதற்கு பிறகு திருமண ஆசை வந்துவிடுகிறது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை வரன் தேட ஆரம்பிக்கிறார், அப்பொழுது எந்தப் பெண்ணும் அமையவில்லை, ஆனால் இறுதியாக ஒரு பெண் அவர் வாழ்க்கையில் குறுக்கிடுகிறாள்.. அந்தப் பெண்ணுக்கும் இவருக்கும் திருமணம் ஆனதா இல்லையா? என்பதையே நகைச்சுவையாகவும் சுவாரசியமாகவும், இருக்கும் வகையில் படமாக்கியுள்ளோம் என இயக்குனர் படம் பற்றி கூறினார்.
|