LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    இந்திய சுற்றுலா Print Friendly and PDF

இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் ஓவியக் கலைகள்

கலை என்பது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு மாறும். அதேபோல், கலை எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகம் உருவாக்குவதாகத்தான் இருக்கும். அதுவும் குறிப்பாக, பாரம்பரியக் கலைகளை இன்னும் அந்தந்த சமூகத்தினர் பாதுகாத்து வருகின்றனர் என்றே கூறலாம்.
***************************
 நமது அரசும் அந்தப் பாரம்பரியக் கலைகளைத் தேடிப்பிடித்துப் பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள  மாநிலங்களின் பாரம்பரியக் கலைகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.
**************************
எய்பன்(Aipan) கலை ஓவியம்
****************************
இது உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய ஓவியக் கலை. இந்தக் கலை 10-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த சந்த் ராஜ்யத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. எய்பன் கலை இயற்கை மற்றும் இந்து, ஜெயின், புத்த சமயங்களின் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான ஒன்றாகும். இந்த ஓவியத்தை இந்தியாவில் பெரும்பாலும் வாசல் அல்லது சாமி சிலைகள் வைக்கும் அறைக்குள் பயன்படுத்துவார்கள். இந்த ஓவியங்களில் பயன்படுத்தும் காவி அல்லது அரிசி மாவு அதிர்ஷ்டத்தைத் தரும் எனப் பலராலும் நம்பப்பட்டு வருகிறது.
***********************
தெலங்கானாவில் வாழும், ‘பல்லடீர்’
***********************************
எனப்படும் காகி படகொல்லு சமூகத்தினர் உருவாக்கியது. ராகி மாவு மற்றும் பழங்கள் மூலம் தயாரிக்கும் வண்ணங்கள் பயன்படுத்தி ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை ஓவியமாகத் தீட்டுவார்கள். இந்த ஓவியம் 40 முதல் 45 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த ஓவியத்தின் பின்புலத்திற்குக் காவி நிறம்தான் பயன்படுத்துவார்கள்.
**************************************
சித்தரா ஓவியம்
**********************
இந்த ஓவியம் கர்நாடகாவில் உள்ள தேவாரா சமூகத்தினர் உருவாக்கியது. குறிப்பாக, பெண்கள் விழாக்கள், வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றை வரைந்து வைப்பார்கள்.
**************************
இன்னும் கர்நாடகாவில் சித்தரா ஓவியக் கலையை வரைவது பழக்கத்தில் உள்ளது. இந்த ஓவியம் 2 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். வெள்ளை நிறத்திற்கு அரிசி மாவும், கருப்பு நிறத்திற்கு வறுத்த அரிசி மாவும் பயன்படுத்துவார்கள். வரைவதற்கு நார் பிரஷ்ஷையே பயன்படுத்துவார்கள்.

கலை என்பது ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஏற்றவாறு மாறும். அதேபோல், கலை எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகம் உருவாக்குவதாகத்தான் இருக்கும். அதுவும் குறிப்பாக, பாரம்பரியக் கலைகளை இன்னும் அந்தந்த சமூகத்தினர் பாதுகாத்து வருகின்றனர் என்றே கூறலாம்.

நமது அரசும் அந்தப் பாரம்பரியக் கலைகளைத் தேடிப்பிடித்துப் பாதுகாத்து வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் உள்ள  மாநிலங்களின் பாரம்பரியக் கலைகள் பற்றி இந்தத் தொகுப்பில் பார்ப்போம்.

எய்பன்(Aipan) கலை ஓவியம்

இது உத்தரகாண்ட் மாநிலத்தின் பாரம்பரிய ஓவியக் கலை. இந்தக் கலை 10-ம் நூற்றாண்டில் ஆட்சி புரிந்த சந்த் ராஜ்யத்தில் உருவாக்கப்பட்ட ஒன்று. எய்பன் கலை இயற்கை மற்றும் இந்து, ஜெயின், புத்த சமயங்களின் கோட்பாடுகள் மற்றும் நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவான ஒன்றாகும். இந்த ஓவியத்தை இந்தியாவில் பெரும்பாலும் வாசல் அல்லது சாமி சிலைகள் வைக்கும் அறைக்குள் பயன்படுத்துவார்கள். இந்த ஓவியங்களில் பயன்படுத்தும் காவி அல்லது அரிசி மாவு அதிர்ஷ்டத்தைத் தரும் எனப் பலராலும் நம்பப்பட்டு வருகிறது.

தெலங்கானாவில் வாழும், ‘பல்லடீர் எனப்படும் காகி படகொல்லு சமூகத்தினர் உருவாக்கியது.

ராகி மாவு மற்றும் பழங்கள் மூலம் தயாரிக்கும் வண்ணங்கள் பயன்படுத்தி ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளை ஓவியமாகத் தீட்டுவார்கள். இந்த ஓவியம் 40 முதல் 45 அடி உயரமும் 3 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். இந்த ஓவியத்தின் பின்புலத்திற்குக் காவி நிறம்தான் பயன்படுத்துவார்கள்.

சித்தரா ஓவியம்

இந்த ஓவியம் கர்நாடகாவில் உள்ள தேவாரா சமூகத்தினர் உருவாக்கியது. குறிப்பாக, பெண்கள் விழாக்கள், வாழ்வின் முக்கியமான நிகழ்வுகள் ஆகியவற்றை வரைந்து வைப்பார்கள்.

இன்னும் கர்நாடகாவில் சித்தரா ஓவியக் கலையை வரைவது பழக்கத்தில் உள்ளது. இந்த ஓவியம் 2 அடி நீளமும் 3 அடி அகலமும் கொண்டதாக இருக்கும். வெள்ளை நிறத்திற்கு அரிசி மாவும், கருப்பு நிறத்திற்கு வறுத்த அரிசி மாவும் பயன்படுத்துவார்கள். வரைவதற்கு நார் பிரஷ்ஷையே பயன்படுத்துவார்கள்.

by Kumar   on 23 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மூணாறில் வரலாறு காணாத வெப்பம். மூணாறில் வரலாறு காணாத வெப்பம்.
உலக அதிசயம் தாஜ் மஹால் ! உலக அதிசயம் தாஜ் மஹால் !
இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்! இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்!
இந்தியாவில் முதல்முறையாக துவாரகாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவை அறிமுகம்..! இந்தியாவில் முதல்முறையாக துவாரகாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவை அறிமுகம்..!
இமயமலையைப் பறந்தபடி சுற்றிப்பார்க்க கைரோகாப்டர் சுற்றுலா சேவை அறிமுகம்... இமயமலையைப் பறந்தபடி சுற்றிப்பார்க்க கைரோகாப்டர் சுற்றுலா சேவை அறிமுகம்...
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.