LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    இந்திய சுற்றுலா Print Friendly and PDF

இமயமலையைப் பறந்தபடி சுற்றிப்பார்க்க கைரோகாப்டர் சுற்றுலா சேவை அறிமுகம்...

டேராடூன் உத்தரகண்ட்டில், இமயமலையின் அழகை வானில் பறந்தபடி சுற்றிப்பார்க்க, நாட்டிலேயே முதல்முறையாக, 'கைரோகாப்டர்' சுற்றுலாவை அம்மாநில அரசு அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான சோதனை ஓட்டம் சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டது.

 

புதிய முயற்சி

 

உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

 

இங்குள்ள இமயமலையின் அழகைப் பார்த்து ரசிக்க, சுற்றுலா பயணியர் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கில் குவிகின்றனர்.

 

 

மாநில அரசுக்கான வருவாயில், சுற்றுலாத்துறை முக்கிய பங்களிப்பதால், அதில் பல்வேறு புதிய முயற்சிகளை மாநில அரசு செய்து வருகிறது.

 

இதன் ஒரு பகுதியாக, இமயமலையின் அழகை வானில் பறந்தபடி சுற்றிப் பார்க்க, 'கைரோகாப்டர்' சுற்றுலா சேவையை அம்மாநில அரசு துவங்க உள்ளது. 'கைரோகாப்டர்' என்பது, ஹெலிகாப்டரை விட அளவில் சிறியது. இதில், இருவர் மட்டுமே பயணிக்க முடியும். >

 

மலைப்பிரதேசங்களில் பறக்க வசதியான இந்த வாகனம், பாதுகாப்பானது என்றும் கூறப்படுகிறது.

 

உத்தரகண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரியமும், 'ராஜாஸ் ஏரோஸ்போர்ட்ஸ் அண்டு அட்வென்ச்சர்ஸ்' என்ற தனியார் நிறுவனமும் இணைந்து, இமயமலை தொடரில் கைரோகாப்டர் சுற்றுலா சேவையை நம் நாட்டில் முதல்முறையாகத் துவங்க உள்ளன.

 

இதற்கான சோதனை ஓட்டம், ஹரித்வாரில் உள்ள பைராகி முகாமில் கடந்த 16ம் தேதி வெற்றிகரமாகச் செய்து முடிக்கப்பட்டது.

 

இது குறித்து உத்தரகண்ட் சுற்றுலா வளர்ச்சி வாரியத்தின் கூடுதல் தலைமை நிர்வாக அதிகாரி கர்னல் அஸ்வினி பந்திர் கூறியதாவது:

 

இமயமலை தொடரில், சுற்றுலா பயணியர் இதுவரை பார்த்திராத இயற்கை எழில் கொண்ட பகுதிகளுக்கு அழைத்துச் செல்வதே கைரோகாப்டர் சேவையைத் துவங்குவதற்கான நோக்கம். இந்த பயணம் பாதுகாப்பானதாகவும், சாகசம் நிறைந்ததாகவும் இருக்கும்.

 

முறையான பயிற்சி

 

இதற்காக, ஐரோப்பிய நாடான ஜெர்மனியிலிருந்து, கைரோகாப்டர் வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. சிறப்புப் பயிற்சி பெற்ற ஜெர்மனி நாட்டு பைலட்கள் இந்த வாகனத்தை இயக்க உள்ளனர்.

 

முறையான பயிற்சிகளுக்குப் பின், நம் பைலட்கள் இந்த வாகனங்களை இயக்கத் துவங்குவர். இதற்காகவே, விமானப் போக்குவரத்துத் துறை உதவியுடன் உத்தரகண்டின் பல்வேறு பகுதிகளில், சிறிய அளவிலான இறங்கு தளங்களை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம்.

 

இவ்வாறு அவர் கூறினார்.

by Kumar   on 21 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
மூணாறில் வரலாறு காணாத வெப்பம். மூணாறில் வரலாறு காணாத வெப்பம்.
உலக அதிசயம் தாஜ் மஹால் ! உலக அதிசயம் தாஜ் மஹால் !
இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்! இந்தியாவில் சுற்றிப்பார்க்க வேண்டிய 8 வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்கள்!
இந்தியாவில் முதல்முறையாக துவாரகாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவை அறிமுகம்..! இந்தியாவில் முதல்முறையாக துவாரகாவில் சுற்றுலாப் பயணிகளுக்காக நீர்மூழ்கிக் கப்பல் சேவை அறிமுகம்..!
இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் ஓவியக் கலைகள் இந்தியப் பாரம்பரியத்தைப் பேசும் ஓவியக் கலைகள்
இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு இந்தியாவில் உலகின் மிகப்பெரிய நதி தீவு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.