தமிழகத்தில் உள்ள பல்தொழில்நுட்பக்(Polytechnic) கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணியிடங்களை(பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கு) நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
Advt. No : 04/2017 பணியின் பெயர் : விரிவுரையாளர் (பொறியியல் மற்றும் பொறியியல் அல்லாத பாடங்களுக்கு) மொத்த காலிப்பணியிடங்கள் : 1058 பாடவாரியாக ஏற்பட்டுள்ள காலியிடங்கள், ஜாதிவாரியான காலியிடப் பகிர்வு பற்றிய விபரம் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பள விகிதம் : 15,600 - 39,100 வயது : 1.07.2017 தேதியின் படி 57 வயதிற்குள் இருக்க வேண்டும். கல்வித்தகுதி : பொறியியல் பாடங்களுக்கு : காலியிடம் ஏற்பட்டுள்ள பொறியியல் பாடப்பிரிவில் முதல் வகுப்பு பி.இ பட்டம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் அல்லாத பாடங்களுக்கு : காலியிடங்கள் ஏற்பட்டுள்ள பாடப்பிரிவில் முதல் வகுப்பு முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். முறையான கல்வித்திட்டத்தின் கீழ் பட்டப்படிப்பை முடித்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெடுக்கப்படும் முறை : TRB-ஆல் நடத்தப்படும் எழுத்து தேர்வில் பெரும் மதிப்பெண் மற்றும் கூடுதல் கல்வித்தகுதி, பணி அனுபவம் ஆகியவற்றிற்காக வழங்கப்படும் வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்களுக்கு பணி வழங்கப்படும். எழுத்துத் தேர்வு 13.08.2017ல் நடத்தப்படும். எழுத்து தேர்வுக்கான அழைப்பு கடிதம் TRB இணையதளத்தில் வெளியிடப்படும். அதை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். விண்ணப்பக் கட்டணம் : பொது பிரிவினருக்கு ரூ.600/- SC/ST/SCA/PWD பிரிவினருக்கு ரூ.300/- விண்ணப்பக்கட்டணத்தை ஆன்-லைன் மூலம் செலுத்தலாம். விண்ணப்பிக்கும் முறை : www.trb.tn.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்-லைன் முறையில் 07.07.2017 க்கு முன்பாக விண்ணப்பிக்கவும். கூடுதல் விவரங்கள் அறிய கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும் (கிளிக்) செய்யவும் .
http://trb.tn.nic.in/POL2017/16062017/NOTIT.pdf
|