|
||||||||
பட்டதாரிகளுக்கு பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தில் வேலை !! |
||||||||
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.பி.என்.எல்.,லில் காலியாக உள்ள எக்ஸிக்யூடிவ் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த காலியிடங்கள் கேட் 2015 அடிப்படையில் நிரப்பப்படும் என்று தெரிகிறது. வயது வரம்பு : 21 வயது நிரம்பியவராகவும் 27 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். கல்வித் தகுதி : பி.இ., பி.டெக்., பி.எஸ்.சி., இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு படிப்பை எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், கம்ப்யூட்டர் சயின்ஸ், ஐ.டி., எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் ஆகிய ஏதாவது ஒரு பாடத்தில் முடித்திருக்க வேண்டும். அடுத்த ஆண்டு 14.08.2015க்குள் இந்த கல்வித் தகுதியைப் பெறுபவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் கேட் 2015 தேர்வு எழுதி வெற்றி பெற வேண்டும். இந்த மதிப்பெண் அடிப்படையிலேயே தேர்ச்சி இருக்கும். விண்ணப்பிக்கும் முறை: ஆன்-லைன் முறையில் இந்தப் பதவிக்கும், கேட் 2015 தேர்வுக்கும் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையான தகவல்களை இணையதளத்திலிருந்து பெறவும். இந்த பணி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு : http://www.bbnl.nic.in/content/page/vacancies.php என்ற இணையதளத்தைப் பார்க்கவும். |
||||||||
by Swathi on 06 Oct 2014 0 Comments | ||||||||
Tags: பாரத் பிராட்பேண்ட் நிறுவனத்தின் வேலைவாய்ப்பு அரசு வேலைவாய்ப்புகள் மத்திய அரசு வேலைவாய்பு பட்டதாரி வேலைவாய்ப்பு BBNL Recruitment 2014 BBNL Recruitment Graduates BBNL Recruitment 2014 | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|