2013ம் ஆண்டில் அதிக வருவாய் ஈட்டிய உலக பணக்காரர்களில் அமெரிக்க கோடீஸ்வரர் வாரன் பஃப்பெட் முதலிடம் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் தினசரி சுமார் 230 கோடி ரூபாய் அளவுக்கு அவரது சொத்து மதிப்பு உயர்ந்ததாக வெல்த் எக்ஸ் என்ற நிதி ஆலோசனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 78,750 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியதன் மூலம் அவரது மொத்த சொத்து மதிப்பு 3,67,000 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக வெல்த் எக்ஸ் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தப்பட்டியலில் மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைவர் பில் கேட்ஸ் இரண்டாவது இடத்தில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|