இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை இயக்கிய கோகுலின் அடுத்த படம் காஷ்மோரா.
இந்த படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார், ஸ்ரீ திவ்யா மற்றும் நயன்தாரா ஆகியோர் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு சந்தோஸ் நாராயணன் இசை அமைக்கிறார். இப்படத்தின் வேலைகள் தற்போது சுறுசுறுப்பாக நடைபெற்று வருகின்றன.
படப்பிடிப்பு பிப்ரவரி 16-ம் தேதி சென்னையில் தொடங்கவிருக்கிறது. முதலில் இந்த படத்தின் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிகர் வடிவேலு நடிப்பதாக தகவல்கள் வெளி வந்தன. ஆனால் தற்போது வந்த தகவலின்படி, வடிவேலு இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதிலாக விவேக் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
|