போர் களத்தில், கடும் வெப்பத்தில் இருந்து ராணுவ வீரர்களை காக்கும் பொருட்டு, ‘குளுகுளு’ வசதியுடன் கூடிய ஹெல்மட்டை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மையம் வடிவமைத்துள்ளது.
இந்த அதிநவீன ஹெல்மட்டின் மூலம் சுவாசிக்க மூச்சுக்காற்று சுத்திகரிக்கப்படுகிறது. மேலும் தலைப் பகுதிக்கு குளிர்ந்த காற்றை செலுத்தும் வகையில் பேட்டரியுடன் கூடிய கருவி. வீரரின் இடுப்பு அல்லது முதுகு பகுதியில் தொங்க விடப்படும்.
இதை அமெரிக்க ராணுவ ஆராய்ச்சி மையத்தின் எட்ஜ்வுட் கெமிக்கல் பியோலாஜிகல் மைய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு வடிவமைத்தனர்.
அதற்கான தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
|