LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    உலக சுற்றுலா Print Friendly and PDF

கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலாத் தலங்கள்

ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் கூகுள் நிறுவனம் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 நபர்கள், திரைப்படங்கள், சுற்றுலாத் தலங்கள் போன்ற விவரங்களை வெளியிடும்.

 

அந்தவகையில் இந்தியர்களால் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலாத் தலங்களைக் கூகுள் வெளியிட்டுள்ளது. அதன் விவரங்களை இங்கே பார்க்கலாம்...

 

வியட்நாம்

 

சுற்றுலாப் பயணிகளுக்கு எளிதில் செல்ல உகந்த நாடாக வியட்நாம் உள்ளது. இங்குள்ள உணவுகள் மற்றும் இடங்கள் பயணிகளை வெகுவாகக் கவர்கிறது. மற்ற நாடுகளைக் காட்டிலும் வியட்நாம், பயணிகளுக்குப் பாதுகாப்பானதாகவும், எளிதில் பயணிப்பதற்கு வசதியாகவும் உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் நவம்பர் வரை இங்கு அதிகளவில் சுற்றுலா செல்கிறார்கள்.

 

கோவா

 

கோவா மாநிலத்தில் உள்ள கடற்கரைகள், இரவு விருந்துகள், பழமையான கட்டிடங்கள் ஆகியவை புகழ்பெற்றவை. இதனால் இந்தியர்கள் பலருக்கும் கோவா செல்வது விருப்பமான தேர்வாக உள்ளது.

 

பளி

 

இந்தோனேசியாவில் உள்ள மாகாணம் பளி. இங்கு இயற்கைச் சூழல் மிகுந்திருப்பதால் கடவுளின் தேசம் என்று அழைக்கப்படுகிறது. இயற்கை எழில் கொஞ்சும் பளி பகுதிக்குச் செல்லச் சுற்றுலாப் பயணிகள் பலரும் விரும்புகின்றனர்.

 

இலங்கை

 

தேயிலை உற்பத்தியில் இலங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கு டச்சுக்காரர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட வீடுகள், பழமையான அருங்காட்சியகங்கள், ஹியாரே மழைக்காடு போன்றவை சுற்றுலா செல்ல உகந்த இடமாக உள்ளது. கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்துள்ள இலங்கை அரசு சுற்றுலாப் பயணிகளுக்குப் பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது.

 

தாய்லாந்து

 

இங்குள்ள கடற்கரைகள் மற்றும் காடுகள் புகழ்பெற்றவை. இந்தியப் பயணிகள் விசா இல்லாமல் தாய்லாந்து செல்ல அந்நாட்டின் சுற்றுலாத்துறை அனுமதியளித்துள்ளது.

 

காஷ்மீர்

 

கடும் பனியால் குளிர் வாட்டி எடுக்கும்

காஷ்மீரில் உறைந்த ஏரிகள், படகுச் சவாரி செய்யச் சுற்றுலாப் பயணிகள் அதிகம் விரும்புகின்றனர். இங்குள்ள

ஸ்ரீநகர், சோன்மார்க், குல்மார்க், பகல்ஹாம், புல்வாமா பகுதிகளுக்கு அதிகளவில் பயணிக்கின்றனர்.

 

கூர்க்

 

கர்நாடகாவில் உள்ள கூர்க் பகுதியில் உள்ள நீர் வீழ்ச்சிகள், கோட்டை, ஏரிகள், அருங்காட்சியகம் போன்றவை சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. மலைப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் பலரும் ட்ரெக்கிங் செல்கின்றனர்.

 

அந்தமான், நிகோபர் தீவுகள்

 

இங்குள்ள ராதாநகர் கடற்கரை, செல்லுலார் ஜெயில், ரோஸ் தீவு, யானை கடற்கரை, கலப்பத்தூர் கடற்கரை போன்ற பகுதிகளுக்குச் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் பயணிக்கின்றனர். 

 

இத்தாலி

 

இத்தாலியில் பாரம்பரியமான உணவு வகைகள், பழைமையான கட்டிடங்கள், வெனிஸ், ரோம், வாடிகன் சிட்டி போன்ற நகரங்களுக்குப் பயணிகளின் உள்ளது. செல்வது முதன்மையான சுற்றுலா தேர்வாக உள்ளது.

 

சுவிட்ச்செர்லாந்து

 

இங்குள்ள ஜெனிவா, பாசல், கிரிண்டில்வார்ட் போன்ற மலைப்பகுதிகளுக்கு அதிகளவில் பயணிகள் செல்கின்றனர்.

by Kumar   on 31 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கொழும்பு தாமரைக் கோபுரத்தைக் காண வந்த 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு தாமரைக் கோபுரத்தைக் காண வந்த 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்
2023-ல் மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் 2023-ல் மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்
சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 சுற்றுலாத்தலங்கள் சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 சுற்றுலாத்தலங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.