LOGO
  முதல் பக்கம்    சுற்றுலா    உலக சுற்றுலா Print Friendly and PDF

சிங்கப்பூரில் மிஸ் பண்ணக்கூடாத டாப் 5 சுற்றுலாத்தலங்கள்

பொதுவாக விடுமுறை தினங்களில் வீட்டில் தூங்கி நாட்களைக் கழிப்பதை விட வெளியிலுள்ள அழகான இடங்களைப் பார்த்து இயற்கையோடு பொழுதைக் கழிக்கலாம்.

 

அந்த வகையில் நிதிநிலையிற்கேற்ப நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய சொர்க்கம் தான் சிங்கப்பூர். அழகிய நாடுகள் பல இருந்தாலும் தனித்துவமான இடங்களால் சிங்கப்பூர் இன்றளவும் சுற்றுலாப் பயணிகளால் விரும்பப்படுகிறது.

 

மேலும் இங்குச் செல்பவர்களின் பார்வைக்கு எனப் பிரம்மாண்டமான பூங்காவான கார்டன்ஸ் பை தி பே முதல் சென்டோஸா தீவு, சிங்கப்பூரின் ஃபிளையர் வரை இடங்கள் இருக்கின்றன.

 

குடும்பம், குழந்தைகளுடன் சந்தோசமாகப் பொழுதைக் கழிக்க நினைப்பவர்கள் இங்குத் தாராளமாகச் செல்லலாம்.

 

அந்த வகையில் சிங்கப்பூரில் நாம் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

 

1. மெரினா பே சாண்ட்ஸ்

 

இந்த இடமானது 5.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில் கட்டமைக்கப்பட்டது. மெரினா பே சாண்ட்ஸில் சொகுசு ஹோட்டல், உணவகங்கள், எண்ணில் அடங்காத கடைகள், தியேட்டர், ஆர்ட் சயின்ஸ் மியூசியம் என பல இடங்களை ஒரே இடத்தில் பார்க்கலாம். அத்துடன் செயற்கை பனியால் செய்யப்பட்ட உட்புறச் சறுக்கு வளையத்தையும் கொண்டுள்ளது. இதனால் தான் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள்.

 

2. சிங்கப்பூர் ஃப்ளையர்

 

சிங்கப்பூர் சென்றால் மறக்காமல் பார்க்க வேண்டிய இடங்களில் ஃப்ளையரும் ஒன்று. நகரத்திற்கு மேலே வட்டமிடும்போது கார்கள் 28 பேர் வரை இதில் அமரலாம். மரினா விரிகுடாவில் அமைந்துள்ள ஃப்ளையர்ஸ் டெர்மினல் மூன்று தளங்களில் உணவகங்கள், கடைகள் உள்ளிட்ட இடங்களைக் கொண்டுள்ளது.

 

3. புத்தர் டூத் ரெலிக் கோயில்

 

ஆன்மீகம் சார்ந்த இடங்களைச் சிங்கப்பூரில் பார்க்க வேண்டும் என நினைத்தால் இந்த இடத்திற்குச் செல்லலாம். சீனர்களின் கடவுள் நம்பிக்கையை உணர்த்த இவ்வாறு பல கோயில்கள் இருந்தாலும் இதில் கலைகள் அதிகமாக இருக்கின்றதால் பயணிகள் அதிகமாக வந்து பார்வையிடுகிறார்கள். இங்குள்ள கலாச்சாரங்களைப் பார்க்கும் பொழுது வித்தியாசமாக வைத்திருக்கின்றது.

 

4. நைட் சஃபாரி

 

சிங்கப்பூர் பயணத்தை அழகாக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. இந்த இடம் 1984 இல் திறக்கப்பட்டது. திறக்கப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அனைவரும் வந்து செல்லும் இடமாகத் தான் இருக்கின்றது. விலங்குகளை ரசித்துக் கொண்டே, இங்குள்ள மூன்று உணவகங்களில் உணவருந்தி மகிழலாம். இது தான் இடத்தின் சிறப்பாகவும் கூறப்படுகின்றது.

 

5. சிங்கப்பூர் தாவரவியல் பூங்கா

 

நிதிநிலைக்குள் சிங்கப்பூரைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என நினைத்தால் தேசிய ஆர்க்கிட் தோட்டத்திற்குச் செல்லலாம். பார்ப்பதற்கு அதிகமான இடங்களைக் கொண்டு இயற்கையோடு எம்மை இணைந்து கொள்கின்றது. இந்தத் தோட்டத்தில் 60,000 க்கும் மேற்பட்ட வகையான தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. மேலும் இது உலகின் முதல் குழந்தைகளுக்கான தோட்டம் எனவும் அழைக்கப்படுகின்றது.   

by Kumar   on 27 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
கொழும்பு தாமரைக் கோபுரத்தைக் காண வந்த 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கொழும்பு தாமரைக் கோபுரத்தைக் காண வந்த 50 ஆயிரம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்
2023-ல் மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம் 2023-ல் மாலத்தீவுக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகளில் இந்தியர்கள் முதலிடம்
கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலாத் தலங்கள் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 சுற்றுலாத் தலங்கள்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.