LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- மற்ற நாட்டு பிரதமர்கள் -Presidents of other countries

தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !!

ஒரு தென் அமெரிக்க நாடான கயானாவின் புதிய பிரதமராக தமிழ் வம்சாவழியைச் சேர்ந்த, மோஸஸ் வீராசாமி நாகமுத்து வரும் மே 26 அன்று பதவி ஏற்க இருக்கிறார்.

தென் அமெரிக்க நாடான கயானாவில் பிரதமர் மற்றும் குடியரசுத்தலைவர் தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி வெற்றி பெற்றுள்ளது. அதன் பிரதமர் வேட்பாளர் மோஸஸ் நாகமுத்து ஒரு வம்சாவளி தமிழர் ஆவார்.

சுமார் 177 ஆண்டுகளுக்கு முன் ஆங்கிலேயரால் கரும்புத் தோட்டக் கூலிகளாக அழைத்துச் செல்லப்பட்ட இந்தியர்களில் தமிழர்களும் இருந்தனர். அத்தகைய தமிழர்தான் நாகமுத்து.

இதுவரை ஒரு நாட்டின் பிரதமராக தமிழர் யாரும் இருந்ததில்லை. சிங்கப்பூரின் குடியரசு தலைவராக S.R.நாதன் இருந்துள்ளார். சிலர் துணைப் பிரதமராக இருந்துள்ளனர்.

அமைச்சராக தமிழர் இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீசியஸ், தென்னாபிரிக்கா, ஃபிஜி போன்ற நாடுகளில் இருந்துள்ளார்கள். ஆனால் பிரதமராக யாரும் இருந்ததில்லை.

இப்போது முதல் முறையாக தமிழர் ஒருவர் ஒரு நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.   

 

> https://www.facebook.com/pages/Moses-Nagamootoo/234109576648233
>
> http://en.wikipedia.org/wiki/Moses_Nagamootoo

https://www.facebook.com/pages/Moses-Nagamootoo/234109576648233

http://en.wikipedia.org/wiki/Moses_Nagamootoo

First Tamil Prime Minister in Guyana.

Moses Veerasammy Nagamootoo (born 30 November 1947) is a Guyanese politician and writer. He belongs to the Tamil ethnicity.
 
Nagamootoo was born in the village of Whim, in the eastern County of Berbice, Guyana. He worked as a teacher and journalist, and later became a lawyer.
 
He was elected to Parliament in 1992 as a People's Progressive Party MP and subsequently served as Minister of Information and Minister of Local Government. He remained in Cabinet under the presidencies of Cheddi Jagan, Samuel Hinds, Janet Jagan and Bharrat Jagdeo. He resigned as Minister in 2000 but remained an MP until 2011, when he resigned from the PPP, having first joined in 1964.
 
As a leader of the PPP, Nagamootoo received the fifth-highest number of votes (595) in the election to the PPP Central Committee at its 29th Congress on August 2, 2008.[1]
 
Nagamootoo was rumoured to be a potential PPP candidate for President in 2011; however, he resigned from the party on October 24, 2011, due to his feeling of "more ideas and a new conversation about Guyana's economic and foreign policy future".[citation needed] He joined the Alliance For Change (AFC) in October 2011 and was re-elected to Parliament.
 
He is the author of the novel Hendree's Cure (2001), which describes a world of Madrassi fishermen who inhabited the Corentyne village of Whim in the 1950s and 1960s.

by Swathi   on 18 May 2015  3 Comments
Tags: தமிழ் வம்சாவளி பிரதமர்   மோஸஸ் வீராசாமி நாகமுத்து   Guyana Prime Minister   Moses Veerasammy Nagamootoo           
 தொடர்புடையவை-Related Articles
தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !! தமிழ் வம்சாவழியைச் சேர்ந்தவர் கயானா நாட்டின் பிரதமராக பதவியேற்க இருக்கிறார் !!
கருத்துகள்
14-Oct-2018 02:51:11 asokan said : Report Abuse
நேர்மையும் உழைப்பும் எளிமையான வாழ்கை முறையும் சாதாரண மனிதனையும் உயர்த்தும் .கடல் கடந்து சென்ற ஒரு தமிழர் அமெரிக்கா கண்டத்தில் ஒரு நாட்டின் பிரதமர் ஆகி இருப்பது தமிழ் இனத்திற்கே பெருமை.இவரே உண்மையான தமிழ் இன உலக தலைவர். சமீபத்தில் maurutius நாட்டு தலைவர் திருப்பதி கோயிலில் VIP தரிசனம் வேண்டாம் என மறுத்து சாதாரண பக்தனை போல் சாமி தரிசனம் செய்த உத்தமரும் ஒரு தமிழரே என்று நினைவு கூறுவதில் எத்துணை மகிழ்ச்சி எத்துணை பெருமை நம் இனத்திற்கு .
 
03-Nov-2015 13:51:28 முனைவர் இரா. தேன்மொழியான் said : Report Abuse
”தமிழன் என்று சொல்லடா ; தலைநிமிர்ந்து நில்லடா” என்ற் கனவை நனவாக்கிய தமிழனே ; கயானாவின் பிரதமரே ! உம்முடைய உயர்வு உலகத்தமிழின் உயர்வு ; உம்மால் நம் தமிழினம் பெருமையடைகிறது ! உமக்குத் தமிழ் தெரியுமா என்பதை யாமறியோம் . ஆனாலும் உயிர்த்தமிழில் உம்மை வாழ்த்தி வணங்குகிறோம் ! ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தாயின் நிலையில் இதய வாழ்த்துகளைத் தெரிவிக்கிறோம் !
 
13-Jun-2015 20:00:47 செல்வம் ந said : Report Abuse
வாழ்த்தி வணங்குகிறோம் ஓம் சக்தி
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.