LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தடம் பதித்தவர்கள் -Tamil Achievers Print Friendly and PDF
- மற்ற தமிழ் தொண்டுகள்

பன்முகத் திறன் கொண்டவர் ஞாநி சங்கரன்

தோற்றம் -  4 ஜனவரி 1954 
************* 
மறைவு  -   15 ஜனவரி 2018
************* 
பிறந்த ஊர் - செங்கல்பட்டு
*************
மாவட்டம் - செங்கல்பட்டு (தமிழ்நாடு - இந்தியா)
*************
அப்பா வேம்பு சாமி, சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது.
************* 
பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.
*************
1973-74-ல் இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார். 1974-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார். அதன் பின்னர் 1975-ல் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார்.
*************
 தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர்.
*************
கட்டுரைத் தொகுப்புகள்
*************
பழைய பேப்பர், மறுபடியும், கண்டதைச் சொல்லுகிறேன், கேள்விகள் மனிதன் பதில்கள், நெருப்பு மலர்கள், பேய் அரசு செய்தால், அயோக்கியர்களும் முட்டாள்களும், கேள்விக் குறியாகும் அரசியல், அறிந்தும் அறியாமலும், ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்), என் வாழ்க்கை என் கையில், ஆப்பிள் தேசம்.
*************
நாடகங்கள் - புதினங்கள்
*************
பலூன், வட்டம், எண் மகன், விசாரணை, சண்டைக்காரிகள் என்ற புதினத்தையும், அய்யா என்ற பெயரில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைக்கதை  மற்றும் அய்யா மற்றும் ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இதில் ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில்  ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்பது   குறிப்பிடத்தக்கது ஆகும். 
*******************
மறைவு
*********************
சிறுநீரகப் பிரச்சினைக்குச் சிகிச்சைபெற்று வந்த ஞாநி 2018ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி சென்னை     கே.கே. நகரில் உள்ள வீட்டில் தனது        64 ஆவது   வயதில் காலமானார்.
*******************
ஞாநியின் மரணம் தமிழகத்தின் முற்போக்கு பத்திரிகை உலகுக்குப் பெரும் இழப்பு எனப் பிரபலங்கள் கருத்து தெரிவித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.

                                                 தோற்றம் -  4 ஜனவரி 1954 

                                                 மறைவு  -   15 ஜனவரி 2018

                                                 பிறந்த ஊர் - செங்கல்பட்டு

                                                 மாவட்டம் - செங்கல்பட்டு (தமிழ்நாடு - இந்தியா)

அப்பா வேம்பு சாமி, சென்னையில் ஆங்கிலப் பத்திரிகையாளராகப் பணியாற்றியவர். அம்மாவின் பெயர் பங்காரு. செங்கற்பட்டு புனித சூசையப்பர் பள்ளியில் பதினோராவது வரை படித்த சூழல் அவரை பேச்சு, எழுத்து, நடிப்புத் துறைகளில் ஈடுபடுத்தியது.

பிறகு தாம்பரத்திலுள்ள சென்னை கிறித்துவக் கல்லூரியில் பயின்றார். கல்லூரியில் தமிழ்ப்பேரவை செயலாளராக இருந்தபோது 1971 தேர்தலில் காமராஜ்-ராஜாஜி-சோ கூட்டணியை எதிர்த்து இந்திரா காந்தி-கருணாநிதியின் அணிக்கு ஆதரவாக செங்கற்பட்டு மாவட்டம் முழுவதும் பிரசாரம் செய்தார். கல்லூரியில் படிக்குங் காலத்திலே வம்பன் என்ற கையெழுத்து இதழை நடத்தினார்.

1973-74-ல் இந்தியன் எக்ஸ்பிரஸில் விளம்பரக் கணக்குப் பிரிவில் கடைநிலை உதவியாளராகப் பணியாற்றினார். 1974-ல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் இதழியல் பட்டயப் படிப்பில் சேர்ந்தார். அதன் பின்னர் 1975-ல் இந்தியன் எக்ஸ்பிரசில் நிருபராக வேலைக்குச் சேர்ந்தார்.

தமிழ் எழுத்தாளர், நாடகக் கலைஞர், அரசியல் விமர்சகர், கட்டுரையாளர், அரசியல்வாதி என்று பன்முகத் திறனுள்ளவர்.

கட்டுரைத் தொகுப்புகள்

பழைய பேப்பர், மறுபடியும், கண்டதைச் சொல்லுகிறேன், கேள்விகள் மனிதன் பதில்கள், நெருப்பு மலர்கள், பேய் அரசு செய்தால், அயோக்கியர்களும் முட்டாள்களும், கேள்விக் குறியாகும் அரசியல், அறிந்தும் அறியாமலும், ஓ பக்கங்கள் (ஆறு தொகுதிகள்), என் வாழ்க்கை என் கையில், ஆப்பிள் தேசம்.

நாடகங்கள் - புதினங்கள்

பலூன், வட்டம், எண் மகன், விசாரணை, சண்டைக்காரிகள் என்ற புதினத்தையும், அய்யா என்ற பெயரில் பெரியாரின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைக்கதை  மற்றும் அய்யா மற்றும் ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும்? உள்ளிட்ட குறும்படங்களையும் இயக்கியுள்ளார். இதில் ஜேம்ஸ் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ற ரீல் இயக்கத்தின் சார்பில் ஒரே ரீலில்  ஒரே டேக்கில் எடுக்கப்பட்டது என்பது   குறிப்பிடத்தக்கது ஆகும்.

மறைவு

சிறுநீரகப் பிரச்சினைக்குச் சிகிச்சைபெற்று வந்த ஞாநி 2018ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி சென்னை     கே.கே. நகரில் உள்ள வீட்டில் தனது  64 ஆவது  வயதில் காலமானார். ஞாநியின் மரணம் தமிழகத்தின் முற்போக்கு பத்திரிகை உலகுக்குப் பெரும் இழப்பு எனப் பிரபலங்கள் கருத்து தெரிவித்து இரங்கல் தெரிவித்துள்ளனர்.

by Kumar   on 12 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள் தோழர் இரா.நல்லகண்ணு 99-வது பிறந்தநாள்
வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன் வாழ்நாளில் பெரும்பகுதியை மக்களுக்காக செலவிட்டவர் மைதிலி சிவராமன்
சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி சுப்பிரமணிய பாரதி எனும் மகாகவி பாரதி
கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி கர்நாடக இசையுலகின் பேரரசி எம். எஸ். சுப்புலட்சுமி
உவமை கவிஞர் சுரதா உவமை கவிஞர் சுரதா
நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா நூற்றாண்டு கண்ட விடுதலை போராட்ட வீரர் என்.சங்கரய்யா
மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர் மனித நேயம் மிக்கவராக வாழ்ந்தவர் தியாகராஜபாகவதர்
முத்துராமலிங்க தேவர் முத்துராமலிங்க தேவர்
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.