இந்த ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை வெனிசுலா நாட்டை சேர்ந்த கேப்ரியேலா இஸ்லர் வென்றுள்ளார்.
மிஸ் யூனிவர்ஸ்-2013 போட்டி ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அழகி மானசி மோகே உள்பட 86 நாடுகளை சேர்ந்த இளம்பெண்கள் பங்கேற்றனர். பல நாடுகளை சேர்ந்த பல துறைகளை சேர்ந்த முன்னணி பிரபலங்கள் நடுவர்களாக பங்கேற்ற இந்த 62வது உலக அழகி போட்டியில், 25 வயதான 'மிஸ் வெனிசுலா' பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லர் உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த அழகியும், மூன்றாவது இடத்தை ஈக்குவடோர் நாட்டை சேர்ந்த அழகியும் வென்றனர்.
உலக அழகி பட்டம் வென்ற கேப்ரியேலா இஸ்லருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற அமெரிக்காவின் ஒலிவியா கல்ப்போ உலக அழகிக்கான வைர மகுடத்தை சூட்டினார்.
|