|
||||||||
ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு - பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.... |
||||||||
ஏர் இந்தியா(Air India Air Transport Services Ltd) நிறுவனத்தில் காலியாக உள்ள Security Agents பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணியின் பெயர் : Security Agents மொத்த காலிப்பணியிடங்கள் : 345 (UR - 165, OBC - 102, ST - 22, Sc - 56) சம்பளம் : 14,610 வயது வரம்பு : விண்ணப்பதாரர்கள் 28 வயதிற்குள் இருக்க வேண்டும். (01.12.2016 தேதிப்படி) வயது வரம்பு தளர்வு : Basic AVSEC சான்று பெற்றவர்கள் / OBC பிரிவினர்களுக்கு மூன்று வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு ஐந்து வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். கல்வித்தகுதி : Basic AVSEC சான்று / Screener சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டம் பெற்று ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருக்க வேண்டும். உடற்தகுதி : ஆண்கள் உயரம் : பொது பிரிவினர்கள் : 170 செ.மீ SC & OBC பிரிவினர்கள் : 165 செ.மீ ST பிரிவினர்கள் : 162.5 செ.மீ பெண்களின் உயரம் : பொது பிரிவினர்கள் : 157 செ.மீ SC & OBC பிரிவினர்கள் : 155 செ.மீ ST பிரிவினர்கள் : 150 செ.மீ தேர்ந்தெடுக்கப்படும் முறை : Basic AVSEC / Screener சான்றிதழ் உள்ளவர்களுக்கு : உடற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு மற்றும் உடற்திறன் தேர்வு நடைபெறும் நாள் : 06.12.2016 Basic AVSEC / Screener சான்றிதழ் இல்லாதவர்களுக்கு உடற்திறன் தேர்வு, எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வில் Comprising of Aptitude, Reasoning மற்றும் ஹிந்தி / ஆங்கிலத்தில் Paragraphஆக எழுதும் திறன் பெற்றிருக்க வேண்டும். உடற்திறன் தேர்வு நடைபெறும் நாள் : 07.12.2016 & 08.12.2016 எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள் : 09.12.2016 எழுத்துத்தேர்விற்கு அழைக்கப்படும் SC/St பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் வழங்கப்படும். விண்ணப்பக்கட்டணம் : ரூ.500 இதனை Air India Ltd என்ற பெயரில் Delhiல் மாற்றத்தக்க வகையில் டி.டி யாக எடுக்க வேண்டும்.SC/ST/Ex-SM பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. தகுதியானவர்கள் www.airindia.in என்ற இணையதள முகவரியில் கொடுக்கப் பட்டுள்ள விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களை இணைத்து சமர்பிக்க வேண்டும். தேர்வுகள் நடைபெறும் இடம் : Community Centre, Air India Housing Colony, Vasant Vihar, New Delhi - 110057. |
||||||||
by Swathi on 21 Nov 2016 1 Comments | ||||||||
Tags: Security Agents Security Agents Jobs Security Agents Latest Recruitment Security Agents Govt Jobs Air India Latest Jobs Air India Recruitment ஏர் இந்தியா வேலைவாய்ப்பு | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|