|
||||||||
+2 படித்தவர்களுக்கு ஏர் இந்தியாவில் வேலைவாய்ப்பு !! |
||||||||
விமான சேவை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்தில் கீழ்க்கண்ட பணியிடங்களை நிரப்ப விருப்பமும், தகுதியும் உள்ள திருமணம் ஆகாத நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.. பணியின் பெயர் : Cabin Crew காலியிடங்கள் : 170 (UR - 87, OBC - 43, SC - 28, ST - 12) சம்பளம் : 31,880 வயது வரம்பு : 18 முதல் 22 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC பிரிவினர்களுக்கு 3 வருடங்களும், SC/ST பிரிவினர்களுக்கு 5 வருடங்களும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். கல்வித்தகுதி : +2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் / ஹிந்தியில் சரளமாக பேசும் திறன் பெற்றிருக்க வேண்டும். உடற்தகுதி : உயரம் : ஆண்கள் : 165 செ.மீ பெண்கள் : 157.5 செ.மீ SC/ST பிரிவினர்களுக்கு 2.5 செ.மீ உயரத்தில் தளர்வு வழங்கப்படும். எடை : உயரத்திற்கேற்ற எடையை பெற்றிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் முறை : குழு விவாதம், நேர்முகத்தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனையின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். குழு விவாதத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் "Saree" மற்றும் ஆண்கள் "Formal Attire" அணிந்திருக்க வேண்டும். மேலும் குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வின்போது மேற்குறிப்பிட்டுள்ள உடைகள் அணிந்து எடுத்த அஞ்சல் அட்டை அளவுள்ள இரண்டு புகைப்படங்கள், ஆன்லைன் விண்ணப்பப் படிவம், பிறப்பு சான்றிதழ், ஜாதி சான்றிதழ், மருத்துவ சான்றிதழ்,கல்வி தகுதி சான்றிதழ், அனுபவ சான்றிதழ், NOC சான்றிதழ், இருப்பிட சான்றிதழ் போன்றவற்றின் அசல் மற்றும் நகல்களையும் இணைந்து சமர்பிக்க வேண்டும். NOC சான்றிதல் பெற்று ஆறு மாதத்திற்குள் இருக்க வேண்டும். தேர்வுகளுக்கு அழைக்கப்படும் SC/ST பிரிவினர்களுக்கு இரண்டாம் வகுப்பு ரயில்/பேருந்து கட்டணம் வழங்கப்படும். விண்ணப்பக் கட்டணம் : ரூ.500 இதனை AIR INDIA CHARTERS LIMITED என்ற பெயரில் மும்பையில் மாற்றத் தக்க வகையில் டி.டியாக எடுக்க வேண்டும்.SC/ST பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்கும் முறை : தகுதியானவர்கள் http://airindiaexpress.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணபிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள் : 11.11.2016 கூடுதல் விவரங்கள் அறிய http://airindiaexpress.in/careers.aspx என்ற இணைய தளத்தை பார்க்கவும். |
||||||||
by Swathi on 07 Nov 2016 1 Comments | ||||||||
Tags: Air India Air India Jobs Air India Recruitment Cabin Crew Recruitment ஏர் இந்தியா ஏர் இந்தியா வேலைவாய்ப்பு | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|