இசைஞானி இளையராஜாவும் தற்போது பிரபல சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார்.
இது குறித்து அவரது அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, எனது பெயரில் பல போலி பேஸ்புக் பக்கங்கள் அதிகமாக உள்ளன. இந்த போலி பக்கங்கள் மூலம் தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவே அதிகாரப்பூரவமாக ஃபேஸ்புக் பக்கம் ஒன்றை துவங்கியுள்ளதாகவும், இதுதான் எனது அதிகாரப்பூர்வ தளமாகும். எனது இசையமைப்பு பணிகள் குறித்த அனைத்து தகவல்களும் இனிமேல் இதில் இடம்பெறும் ன இளையராஜா கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 20 ஆம் தேதி இளையராஜா ஃபேஸ்புக்கில் இணைந்த நிலையில், மூன்றே நாளில் 12 லட்சத்து 65,613 பேர் அவரது பக்கத்தை லைக் செய்துள்ளனர்.
இளையராஜாவின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் : https://www.facebook.com/Ilaiyaraaja
|