கயல் படத்திற்கு பிறகு இயக்குனர் பிரபு சாலமன், தனுஷை வைத்து புதிய படம் இயக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
‘ஷமிதாப்’,‘அனேகன் என தனுஷின் அடுத்தடுத்த படங்கள் பிப்ரவரி மாதத்தில் ரிலீசாக இருக்கின்றன. அதேபோல் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ், காஜல் அகர்வால் நடிக்கும் மாரி படத்தின் படபிடிப்புகளும் தற்போது முடியும் தருவாயில் உள்ளது.
இந்நிலையில் பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ் அடுத்து நடிக்க இருக்கிறாராம். படத்திற்கு இசை பிரபுசாலமனின் ஆஸ்தான இசையமைப்பாளர் டி.இமான். ஹீரோயின் , மற்ற தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த தகவல்கள் இன்னும் முடிவாகவில்லையாம்.
|