பனி மலைகள் நிறைந்து காணப்படும் அண்டார்டிகாவில் வைரங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
எப்போதும் உறைந்த நிலையில் இருக்கும் பனிப்பாறை மதிப்பு மிக்க வைரக்கற்களைக் கொண்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்த கருத்து நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் (NATURE COMMUNICATIONS) என்ற இதழில் வெளியாகியுள்ளது. ஆப்ரிக்கா, சைபீரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய பகுதிகளில் நீல நிறக் கிம்பர்லைட்(kimberlites) இருப்பைக் கொண்டே அப்பகுதிகளில் வைரங்கள் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.
இந்த நிலையில் முதன் முறையாக அண்டார்டிகா பகுதியில் கிம்பர்லைட் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது. அண்டார்ட்டிகா பகுதியில் வைரங்கள் இருப்பது தெரிய வந்தாலும், வணிக ரீதியிலான சுரங்க நடவடிக்கைகள் இங்கு மேற்கொள்ள முடியாது என்பது தான் தற்போதைய நிலை.
|