|
||||||||
தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) மாநாடு: |
||||||||
அன்ன சத்திரமும், ஆலயமும் கட்டுவதைவிடச் சிறந்தது "ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" என்றான் மகாகவி பாரதி. இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு அறக்கட்டளை (Tamil Nadu Foundation-TNF) நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்து வருகிறது. அறக்கட்டளை, சிகோகோ தமிழ்ச் சங்கத்துடன் இணைந்து, மே மாதம் 24, 25 தேதிகளில் இந்த மாநாட்டைச் சிகாகோவில் Phesant Run Resort, St.Charles, Illinois என்ற இடத்தில் நடத்தவிருக்கிறது. இந்த மாநாட்டில் தமிழ் நாட்டிலிருந்து அறிஞர்கள், திரை நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா, மதுரை முத்து, பாடலாசிரியர் நா. முத்துக்குமார், தமிழச்சி தங்கபாண்டியன், லேனா தமிழ்வாணன், கவிஞர் மகுடேஸ்வரன் போன்றோர் இதில் அடங்குவர். சின்னத்திரை நட்சத்திரங்கள் தீபக், அர்ச்சனா தொகுத்து வழங்கும் இவ்விழாவில், இலக்கியச் சொற்போர், ஆடல், பாடல், கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். பின்னணிப் பாடகர் கார்த்திக் குழுவினருடன் இசை நிகழ்ச்சி நடத்துகிறார். 'சங்கம் முதல் சிலிகான்வரை' என்ற தலைப்பில் கன்னிக்ஸ் கன்னிகேஸ்வரன் வழங்கும் சேர்ந்திசை (chorus orchestra) மாநாட்டின் மற்றொரு சிறப்பு அம்சம். சிகாகோ தமிழ்ச் சங்கம் ஆரம்பித்து 45 ஆண்டுகள் நிறைவு பெறுவதால், மாநாட்டு நிகழ்ச்சிகள் கூடுதல் சிறப்பாக அமையவிருக்கின்றன இந்த நலத்திட்டங்களை விரிவு படுத்துவற்கான நிதி திரட்ட, அமெரிக்காவின் வெவ்வேறு மாநிலங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த மாநாடு நடத்த்தப்படுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் மாநாட்டின் மூலம் பெறப்படும் நன்கொடைகள் மேற்சொன்ன கல்விப் பணிகளுக்கு வழங்கப்படும். இனிய இலக்கிய நிகழ்வுகள், கவின்மிகு கலைநிகழ்ச்சிகள், தரமான தங்கும் வசதி, சுவையான உணவு என்று மாநாட்டுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. ஏற்பாடு ஒருங்கிணைப்பை அறக்கட்டளைத் தலைவர் பி.கே. அறவாழியும், தமிழ்ச் சங்கத் தலைவர் சோமுவும் செய்து வருகிறார்கள். நன்கொடைகளுக்கு வரிவிலக்கு உண்டு. இந்தச் சேவைக்கு நிதி வழங்கவும், மாநாட்டு நுழைவுச்சீட்டு வாங்கவும், விபரங்களுக்கும்: www.tnfconvention.org.
|
||||||||
by Swathi on 23 May 2014 1 Comments | ||||||||
Tags: Tamilnadu Foundation தமிழ்நாடு அறக்கட்டளை | ||||||||
|
கருத்துகள் | |||||
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|