கவுதம் மேனன் இயக்கத்தில், அஜீத், அனுஷ்கா, திரிஷா ஆகியோர் நடித்துள்ள படம் என்னை அறிந்தால்.
ஹாரிஸ் ஜெயராஜ் இந்த படத்திற்கு இசை அமைத்திருக்கிறார். டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்திருக்கிறார். விறுவிறுப்பாக நடந்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முடித்து விட்டு தற்போது இறுதி கட்ட பணியில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டீசர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இந்நிலையில், அஜீத் ரசிகர்கள் படத்தின் டிரைலர், பாடல்கள், படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். என்னை அறிந்தால் படத்தின் டிரைலரை டிசம்பர் 24, அல்லது கிறிஸ்துமசிலும், படத்தின் பாடல்களை ஜனவரி முதல் வாரத்திலும், படத்தை பொங்கலுக்கு வெளியிடவும் படக்குழுவினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
|