கவுதம் மேனன் இயக்கத்தில் அஜீத், திரிஷா, அனுஷ்கா, அருண்விஜய் நடிப்பில் நேற்று வெளியான என்னை அறிந்தால் திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் நாட்டில் மட்டும் சுமார் 500 திரையரகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட இப்படம் 356 திரைகளில் மட்டும் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளிவந்துள்ளது.
என்னை அறிந்தால் படம் தமிழ் நாட்டில் மட்டும் சுமார் ரூ 12.80 கோடியும், கேரளாவில் சுமார் ரூ 3.75 கோடியும், கர்நாடகாவில் சுமார் ரூ 2.4 கோடியும், மற்ற மாநிலங்கள் சுமார் ரூ 9.75 கோடியும், மற்ற நாடுகளில் சுமார் ரூ 9 கோடிக்கு மேலும் வசூல் செய்துள்ளதாகவும் மொத்தமாக முதல் நாள் வசூல் மட்டும் கிட்டத்தட்ட ரூ 30 கோடியை தாண்டியுள்ளதாக அதிகாரப்பூர்வ மற்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில், என்னை அறிந்தால் திரைப்படம் ஐ மற்றும் கத்தி படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது எனலாம்.
|