LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

கனடா க்யூபெக் நகரில் உலகின் மிகப்பெரிய குளிர்காலத் திருவிழா.

கனடா நாட்டின் மிகப்பெரிய மாகாணம் க்யூபெக். ‘ஃப்ரெஞ்சு' மொழியை அதிகாரப்பூர்வமான மொழியாகக் கொண்டுள்ள இந்த மாகாணத்தின் முக்கிய நகரங்களில் ஒன்று க்யூபெக் நகரம்.

 

செய்ண்ட் லாரன்ஸ் நதிக்கரையில் அழகாக வீற்றிருக்கும் க்யூபெக் நகரில் ஒவ்வொரு வருடமும் குளிர்காலத்தில் பிரமாண்டமான திருவிழா நடைபெறும். உலகிலுள்ள பல நாடுகளிலிருந்து சுமார் ஐந்து முதல் பத்து லட்சம் மக்கள் இந்தத் திருவிழாவில் பங்கேற்கின்றனர். குளிர்காலத்தில் மக்கள் அதிகம் வெளியேறாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடப்பதை மாற்றவே 1894ல் தன்முறையில் இந்தக் குளிர்காலத் திருவிழா நடத்தப்பட்டது. இரண்டு உலகப் போர்களும் நடந்தபோது நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்தத் திருவிழா, இந்த ஆண்டு தனது பிளாட்டினம் ஆண்டை (70ஆம் ஆண்டு) கோலாகலமாக கொண்டாடியது. ஜனவரி 25ஆம் நாள் தொடங்கி பிப்ரவரி 11ஆம் நாள் முடிவடைந்தது.

 

போன்ஹோமும் பனி மாளிகையும்..

 

ஒலிம்பிக் போட்டிகளுக்கு 'மாஸ்கோட்' எனப்படும் சின்னம் இருப்பதுபோல் இந்த க்யூபெக் திருவிழாவிற்கும் ஒரு சின்னம் உள்ளது. குளிர்காலத்தைப் புன்னகையுடன் வரவேற்கும் விதத்தில் சிரித்த முகத்துடன் இருக்கும் 'ஸ்னோமேன்' பொம்மைதான் போன்ஹோம். இதற்கு ப்ரெஞ்சு மொழியில் 'நல்ல மனிதன்' எனப் பொருள். இந்தப் பனி மனிதன் வசிக்கும் பனி மாளிகையை ஒவ்வொரு வருடமும் பிரமாண்டமாக உருவாக்குகின்றனர். வரவேற்பு நிகழ்வுகள் நடைபெறும் இ மாளிகையை இரண்டாயிரம் பனிக்கட்டிகள் கொண்டு வடிவமைக்கின்றனர். ஒவ்வொரு பனிக்கட்டியும் கிட்டத்தட்ட நூறு கிலோ எடை கொண்டது.

 

நூற்றுக்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு அம்சங்கள்..

 

'ஸ்னோ ட்யூப்' எனப்படும் வட்டமான ட்யூப்களில் பனிச்சறுக்கு செய்வது, 'ஸ்கேட்டிங்' எனப்படும் பனிச்சறுக்கு விளையாட்டு, பனியில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சிறிய துளைகளின் வழியாகத் தூண்டில் போட்டு மீன் பிடிப்பது, 'ஸ்லெட்' எனப்படும் மரக்கட்டை வண்டிகளை நாய்கள் இழுத்துச் செல்ல அதில் சவாரி செய்வது, பனியில் வேகமாக ஓடும் குதிரை வண்டிகளில் சவாரி, 150 அடி உயரமுள்ள பனிச்சறுச் மரங்களில் விளையாடுவது, கனடா நாட்டின் புகழ்பெற்ற புட்டின், மேபிள் சிரப் போன்ற உணவு வகைகளைச் சுவைப்பது, பல்வேறு வகையான பனி விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்வது என நூற்றுக்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு அம்சங்களை இந்தத் திருவிழாவில் காண முடியும்.

 

இவற்றைத் தவிரத் திருவிழாவின் ஒவ்வொரு சனிக்கிழமையும் வண்ணமயமான இரவுநேர அணிவகுப்பு •நடைபெறும். அரை மணி நேரம் நடைபெறும் இந்த அணிவகுப்பில் முந்நூற்றுக்கும் மேற்பட்ட இசை, நடனம் மற்றும் உடற்பயிற்சி கலைஞர்கள் தங்கள் திறமைகளால் மக்களை மகிழ்விக்கின்றனர்.

 

உலகப் புகழ்பெற்ற இந்த க்யூபெக் குளிர்காலத் திருவிழா அடுத்த ஆண்டு பிப்ரவரி 7 முதல் 16 வரை நடைபெறவுள்ளது. ஒரு டிக்கெட்டின் விலை இந்திய மதிப்பில் 600 முதல் 900 ரூபாய்.

by Kumar   on 28 Mar 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA. செவ்வாய்க் கிரகத்தின் பாறை மாதிரிகளைப் பூமிக்குக் கொண்டுவரும் முயற்சி - புதிய யோசனைகளை எதிர்பார்க்கும் NASA.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.