|
|||||
பெண்களை விட ஆண்களுக்குத்தான் ஞாபக மறதி அதிகமாம் !! |
|||||
பெண்களை விட ஆண்களுக்கே ஞாபக மறதி அதிகம் உள்ளதாக நார்வே நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
நார்வே நாட்டு விஞ்ஞானிகள், ஞாபக மறதி குறித்து, 48 ஆயிரம் பேரிடம் ஒரு ஆய்வை மேற்கொண்டனர். ஆய்வில் கலந்து கொண்டவர்களிடம், நினைவுபடுத்துவதில் ஏற்படும் பிரச்னைகள், முக்கிய நாட்களையும், பெயர்களையும் எவ்வாறு நினைவுபடுத்திக் கொள்கின்றனர், ஒரு ஆண்டுக்கு முந்தைய நிகழ்வுகளை நினைவில் கொள்ள மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து, ஒன்பது கேள்விகள் கேட்கப்பட்டன. அவர்கள் அளித்துள்ள பதில்களின் அடிப்படையில் ஆய்வு முடிவுகளை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். அவை பின்வருமாறு,
தங்களுக்கு ஞாபக மறதி பிரச்னை இருப்பதாக, பத்தில் எட்டு ஆண்கள், கூறியுள்ளனர். பெண்களுக்கு இந்தப் பிரச்னை இருந்தாலும், ஆண்களுடன் ஒப்பிடும்போது குறைவாக உள்ளது.
பொதுவாக ஞாபக மறதி பிரச்னைகள் 60- 70 வயதுடையவர்களிடம் அதிகம் காணப்படுகின்றன.
குறைவான கல்வித் தகுதியுடையவர்களை விட, அதிக கல்வித் தகுதியுடையவர்களுக்கு ஞாபக மறதி குறைவாக உள்ளது.
கவலை மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு இந்தக் குறைபாடு அதிகளவில் உள்ளதாக இருபாலாரும் தெரிவித்துள்ளனர்.
ஞாபக மறதிக்குள்ள மருத்துவ முக்கியத்துவம் குறித்து மக்கள் இதுவரை அறியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். |
|||||
by Swathi on 24 Jan 2014 0 Comments | |||||
Tags: Memory Loss Memory Power Memories Women Memories Men Memories ஞாபக சக்தி பெண்கள் ஞாபக சக்தி | |||||
Disclaimer: |
|||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|