LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

காற்று சீசன் முடிந்ததால் காற்றாலை மின் உற்பத்தி தமிழகத்தில் கடும் சரிவு!

காற்று சீசன் முடிந்ததால் தமிழகத்தில் காற்றாலை மின்உற்பத்தி கடுமையாக சரிந்துள்ளது. 

தமிழகத்தில் அன்றாட மின்தேவை 16 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு உள்ளது. பல்வேறு மின் உற்பத்தி மூலமும் தனியாரிடம் மின் கொள்முதல் மூலமும் மின்தேவை சமாளிக்கப்படுகிறது. தமிழகத்தில் உள்ள 10 ஆயிரம் காற்றாலைகளில் ஜூன் முதல் அக்டோபர் வரையிலான காலத்தில் அதிக மின்சாரம் கிடைக்கிறது.

அதிகபட்சமாக 5 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு கூட சில நாட்களில் காற்றாலை மின்சாரம் கிடைக்கிறது. தற்போது இந்த மின் உற்பத்தியும் கடுமையாக சரிந்துள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக காற்றாலை மின்உற்பத்தி சரிவடைந்து வருகிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி விட்டதால் காற்றின் வேகம் குறைந்துள்ளது. 

கடந்த சில தினங்களாக காற்றாலைகள் சுழல்வது நின்றுவிட்டது.  பல்வேறு நிலைகளில் காற்றாலைகளில் சுழற்சி அதிகப்பட்சமாக 292 மெகாவாட் அளவிலும் குறைந்தபட்டசமாக பூஜ்யம் என்ற அளவிலும் இருந்தது.

இதனால்  காற்றாலை மின்உற்பத்தி 82 மெகாவாட் என்ற அளவிலேயே இருந்தது. தற்போது மழை சீசன் என்பதால் ஏசி மற்றும் மின்விசிறி பயன்பாடு குறைந்துள்ளது. இதனால் காற்றாலை மற்றும் அணு மின்உற்பத்தி குறைந்த நிலையிலும் மின்தட்டுப்பாடு ஓரளவு சமாளிக்கப்படுகிறது.

by Mani Bharathi   on 22 Nov 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.