சிம்புதேவன் இயக்கத்தில் புலி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமிஜாக்ஸன் ஆகியோர் நடிக்கிறார்கள். மகேந்திரன் இந்த படத்தின் ஒரு முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.
விஜய் இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்க இருப்பதாகவும், அவருடன் இணைத்து மற்றொரு போலீஸ் அதிகாரியாக நான் கடவுள் ராஜேந்திரன் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லியின் ராஜா ராணி படத்தில் சில காட்சிகளில் மட்டும் வந்தாலும் ஸ்கோர் செய்திருக்கும் ராஜேந்திரனுக்கு இப்படத்தில் காமெடியில் ஒரு நல்ல ஸ்கோர் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
|