LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF
- வட அமெரிக்கா

மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள்

அன்பார்ந்த மிச்சிகன் தமிழ் நண்பர்களே!

கடந்த சனிக்கிழமை நடைபெற்ற மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் தைத் திருநாள் பொங்கல் கொண்டாட்டத்தில் பங்கேற்ற உங்கள் அனைவருக்கும் எங்கள் முதற்கண் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்!

- பன்னீர் மற்றும் சந்தனத்துடன் பதிவு மேசையில் வரவேற்பு!
- மகளிர்க்கு மல்லிகைப் பூ!
- குழந்தைகளுக்கு கட்டிக் கரும்பு!
- அழகிய வண்ண பொங்கல் முகப்பு அலங்காரம்!
- தமிழ்ச்சங்க அங்காடி உடன் பல்வேறு வணிகர்களின் கடைகள்!
- திருவள்ளுவர் படத்துடன் மேடை அலங்காரம்!
- தலைவாழை இலையில் அறுசுவை உணவு!
- கண்கவர் நடனங்கள்!
- கவின்மிகு நாடகங்கள்!
- பல்சுவைப் பாடல்கள்!
- நிகழ்ச்சியின் மகுடமாய் "வேள்பாரி" வரலாற்று நாடகம்!
- திரு. நெப்போலியன் தலைமையில் நகைச்சுவை பட்டிமன்றம்!

அப்பப்பா! பனிப்பொழிவு மிகுந்த நாளிலும் பெருந்திரளாக வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நிகழ்ச்சியை ரசித்த பார்வையாளர்கள் அனைவருக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்! நீங்கள் இல்லாமல் இந்த நிகழ்ச்சி இப்படி ஒரு மாபெரும் வெற்றியைப் பெற்றிருக்க முடியாது! இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் மேடை நாடகங்களுக்கும், பட்டிமன்றங்களுக்கும் புலம்பெயர் தமிழர்களிடம் இருக்கும் வரவேற்பினை உள்ளங்கை நெல்லிக்கனி போல் காண முடிந்தது. உங்கள் அனைவரின் அன்பிற்கும், பேராதரவிற்கும் மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது! இந்த நிகழ்ச்சியின் மாபெரும் வெற்றிக்குப் பின் இருக்கும் ஒவ்வொரு தன்னார்வலர்களின் உழைப்பும், நேரமும் நீங்கள் அறிந்ததே! அனைத்து தன்னார்வலர்களுக்கும் எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளைக் காணிக்கையாக்குகிறோம்!

மேலும் இந்த நிகழ்ச்சியின் அழகுக்கு அழகு சேர்க்க பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்திக் கொடுத்த நடன அமைப்பாளர்களுக்கும், பங்கேற்ற சிறுவர்/சிறுமியர்களுக்கும், பெரியவர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்!

எங்களுக்கு தொடர்ந்து ஆதரவு மற்றும் பொருளுதவி செய்து வரும் அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் எங்கள் மேலான நன்றிகளை தெரிவிக்கிறோம். மேலும் அனைத்து தன்னார்வலர் களுக்கும் குறிப்பாக உணவு பரிமாறவும், புகைப்படம் எடுக்கவும் உதவி செய்த அனைவருக்கும் மிக்க நன்றி!

அரங்கை சுற்றியிருந்த நடைபாதைகளையும், வாகன நிறுத்துமிடங்களையும் அதிக சிரத்தையுடன் சுத்தம் செய்ததோடு மட்டுமல்லாது நிகழ்ச்சி முழுவதும் ஒத்துழைப்பு நல்கிய திரு. ஜேஸன் அவருக்கும், அவரது குழுவினருக்கும் நமது அனைவரின் சார்பாக நன்றிகள்!!

மிச்சிகன் தமிழ்ச் சங்கம் தனது நிகழ்ச்சிகள் குறித்த மக்களின் கருத்துகளையும், விமர்சனங்களையும் பரிசீலித்து தொடர்ந்து மேம்படுத்திக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இந்தப் பொங்கல் நிகழ்ச்சிக்கான உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் கீழ்க்கண்ட சுட்டியைப் பயன்படுத்தி எங்களுக்கு தவறாமல் அனுப்புங்கள்!

https://forms.gle/Djm4uDDDR6NL7xVX6

நன்றியுடன்,
மிச்சிகன் தமிழ்ச் சங்க செயற்குழு

by Swathi   on 22 Jan 2020  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.