LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

எச்1பி விசாவை புதுப்பிக்க அமெரிக்கா புது திட்டம்

விசாக்களை புதுப்பிக்க புதிய நடைமுறையை, அமெரிக்க அரசு டிசம்பரில் அறிமுகம் செய்ய உள்ளது.

 

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினருக்கு, எச்1பி உள்ளிட்ட விசாக்கள் அளிக்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்

விசா நடைமுறைகளில் உள்ள குழப்பம் மற்றும் அதிகமானோர் விண்ணப்பிப்பதால், விசா கிடைக்காமல் நீண்ட காலம் காத்திருக்கும் நிலை உள்ளது.

 

இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்கு அமெரிக்கா தொடர்ந்து முயற்சி எடுத்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றபோது, இந்தப் பிரச்னையை, பிரதமர் நரேந்திர மோடி முன்வைத்தார்.

 

இந்நிலையில், விசா புதுப்பிக்க புதிய வசதியை அமெரிக்கா ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத் துறை உயரதிகாரிகள் கூறியுள்ளதாவது:

விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்

வழக்கமாக, விசாவை புதுப்பிக்க, தங்களுடைய சொந்த நாடு அல்லது மற்ற நாடுகளுக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. வரும் டிசம்பரில் இருந்து மூன்று மாதங்களுக்கு, புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 

இதன்படி, அமெரிக்காவிலேயே, விசாவை புதுப்பித்து கொள்ளலாம். முதல்கட்டமாக, 20,000 விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படும்.

 

இதன் வாயிலாக, புதிய விசா கேட்டுள்ள விண்ணப்பங்களை, மற்ற நாடுகளில் உள்ள அமெரிக்க துாதரகங்கள் அதிகளவில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வாய்ப்பு கிடைக்கும். இது இந்தியர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

by Kumar   on 06 Dec 2023  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.