LOGO
  முதல் பக்கம்    இலக்கியம்    திருக்குறள் Print Friendly and PDF

ஓவிய வடிவில் திருக்குறள் ஒரு உன்னத சாதனை

உலகப்பொதுமறை திருக்குறள் பல்வேறு மொழிகளில் பல்வேறு பரிணாமங்களில் உலகம் முழுதும் நாளும் சென்றுகொண்டுள்ளது. இது நம் மொழிக்கும், நமக்கும்  மிகப்பெரிய கவுரவம். இரண்டாயிரம் ஆண்டுகள் தாண்டியும் இன்னும் பல அறிஞர்கள் அதற்கு பல்வேறு கோணத்தில் உரை எழுதிக்கொண்டுள்ளார்கள் என்றால் இதன் பொருளும், அதன் ஆழமும் எந்த காலத்திற்கும் பொருந்தும் வாழ்வியல் கருத்துக்களை உள்ளடக்கி இருப்பதால்தான் என்றால் மிகையாகாது. 


இதுவரை பல்வேறு மொழியில் நூல்,இசை என்று பல்வேறு வடிவில் திருக்குறள் வந்திருப்பினும் 1330 குறளையும் ஓவியமாக நாம் பார்த்ததில்லை. அந்த அரிய முயற்சியை திருப்பூரை சேர்ந்த நல்லாசிரியர் விருது பெற்ற திரு.நடராசன் என்ற ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மிக நுட்பமாக 1330 குறளையும் ஓவியமாக தீட்டியுள்ளார். இவரை வலைத்தமிழ் இணையதளத்திற்காக உரையாடியபோது இவர் பகிர்ந்துகொண்ட கருத்துக்கள் நம்மை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது.  இந்த அரிய முயற்சிக்கு கடந்த ஒரு வருட காலத்திற்கு மேல் அதிகாலை  3 மணிக்கு தொடங்கி கடுமையாக உழைத்திருக்கிறார். முதலில் ஒவ்வொரு குறளையும் உள்வாங்கி அதை ஓவியமாக வரைவது ஒரு புது முயற்சியாக இருந்ததாக குறிப்பிடுகிறார். காரணம் இன்பத்துப்பால் போன்ற இடங்களில் ஒரு கோடு மாறினாலும் அதன் பொருள் மாறிவிடும் என்பதால் மிகவும் நுணுக்கமாகக் வரையவேண்டி இருந்ததாகக் குறிப்பிடுகிறார். மேலும் இந்த முயற்சியை ஆரம்பித்த நாள் முதல் தான் குறளில் நனைந்தேன் என்பதைவிட வள்ளுவருடன் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். 1330 குறளையும் வரைந்து முடித்தபோது அது 13 தொகுதிகளாக வந்திருப்பதாகவும், அதற்கு "திருக்குறளோவிய மத நல்லிணக்க தேசிய ஒருமைப்பாட்டு ஓவியப்பேழை" என்று மகிழ்ச்சி பொங்க விவரிக்கிறார். 


மேலும் இந்த ஓவியங்களை நூலாகவும், குருந்தகடாகவும் கொண்டுவரும் முயற்சியில் இறங்கியிருக்கிறார். இவரது இந்த அறிய பணி திருக்குறளை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க மிகவும் பேருதவியாக இருக்கும் என்று வாழ்த்தி விடைபெற்றோம். 
இவரது ஓவியங்களை வலைத்தமிழ் இணையத்தில் கீழ்காணும் சுட்டியில் காணலாம்.http://www.valaitamil.com/thirukkural-art-photo253-527-0.html

 

 

இவருடன் தொடர்பு கொள்ள: 99762 55579, 0421-2375124.

 

395
by Swathi   on 08 Nov 2013  1 Comments
Tags: thirukkural   thirukkural oviyam   thiruvalluvar   திருக்குறள்   திருக்குறள் ஓவியம்        
 தொடர்புடையவை-Related Articles
திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - Thirukkural: The Holy Scripture நூல்கள் பரிசாக  வழங்கப்பட்டது திருக்குறள் ஐம்பெரும் விழா 2024 - Thirukkural: The Holy Scripture நூல்கள் பரிசாக  வழங்கப்பட்டது
Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Vaagri Booli (வாக்ரி பூலியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Urdu (உருது மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tulu (துளுவில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Tok Pisin (டோக் பிசினில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Thai (தாய் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Telugu (தெலுங்கில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு) Thirukkural translation in Swedish (ஸ்வீடிஷ் மொழியில் திருக்குறள் மொழிபெயர்ப்பு)
கருத்துகள்
24-Dec-2013 07:07:51 RAMESH said : Report Abuse
கட்டுரை நன்றாக இருக்கு .கருத்து வளமும் பொருளும் நன்று
 
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.