|
|||||
கனடா பெண் விஞ்ஞானி உள்பட 3 பேருக்கு இயற்பியலில் நோபல் பரிசு! |
|||||
இந்த ஆண்டுக்கான இயற்பியல் நோபல் பரிசு கனடாவை சேர்ந்த பெண் விஞ்ஞானி உட்பட 3 பேருக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகள், சாதனைகளை நிகழ்த்துவோருக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசு வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகிறது. 2018ம் ஆண்டுக்கான நோபல் பரிசு பெறுவோரின் பெயர்கள் ஸ்வீடன் நகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த ஆர்தர் அஷ்கின்), பிரான்சை சேர்ந்த ஜெராடு மவுரோ (74) மற்றும் கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்டிரிக்லேண்ட் ஆகிய 3 விஞ்ஞானிகளும் இயற்பியலுக்கான நோபல் பரிசை பெறுகின்றனர். பரிசுத் தொகையயான ரூ.7.3 கோடியில் 50 சதவீதத்தை ஆர்தர் அஷ்கின் பெறுகிறார். மீதமுள்ள பரிசுத்தொகையை மவுரோவும், டோன்னாவும் பகிர்ந்து கொள்வார்கள். லேசர் தொழில்நுட்பத்தில் புதிய கண்டுபிடிப்பில் ஈடுபட்டதற்காக 3 பேருக்கும் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய தொழில்நுட்பம் கண் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். இயற்பியல் துறையில் கடந்த 1903ம் ஆண்டு மேரி க்யூரி, 1963ம் ஆண்டு மரியா கோபெர்ட் மேயர் ஆகிய பெண் விஞ்ஞானிகள் நோபல் பரிசு பெற்றுள்ளனர். அதன் பின்னர் எந்த பெண் விஞ்ஞானியும் இயற்பியல் துறையில் நோபல் பரிசை பெறவில்லை. இப்போது, 55 ஆண்டுகளுக்கு பிறகு கனடாவை சேர்ந்த டோன்னா ஸ்டிரிக்ட்லேண்ட் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளார். |
|||||
by Mani Bharathi on 03 Oct 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|