LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

பூகம்பம், சுனாமி தாக்கியதில் இந்தோனேஷியாவில் 500 பேர் பலி!

ஒரை நேரத்தில் பூகம்பமும், சுனாமியும் தாக்கியதில் இந்தோனேஷியாவில் 500 பேர் பலியானார்கள்.

இந்தோனேஷியாவில் தான் உலகிலேயே அதிக அளவில் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை பேரழிவுகள் நடக்கின்றன.

இயற்கையின் கோரதாண்டவத்தால் பலு, டோங்காலா, மமுஜூ ஆகிய 3 நகரங்களை சுனாமி விழுங்கி உள்ளது.

டோங்காலாவில் இதுவரை மீட்புக்குழுவினரால் நுழைய முடியாத அளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளதால்,  லட்சக்கணக்கான மக்களின் கதி என்னவென்று தெரியவில்லை.

இந்தோனேஷியாவின் சுலாவேசி தீவின் மத்தியப் பகுதியில் பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்ட இந்த பூகம்பம், ரிக்டர் அளவுகோலில் 7.5 புள்ளியாக பதிவானது. 

இந்த பூகம்பத்தால் பலு, டோங்காலா  நகரங்கள் அதிர்ந்தன. இதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, பின்னர் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் பலு கடற்கரை பகுதியில் சுமார் 18 அடி உயரத்திற்கு அலைகள் எழுந்து சுனாமி பேரலை தாக்கியது.

சுனாமியால் கடற்கரையை ஒட்டிய வீடுகள், கட்டிடங்களில் கடல் நீர் புகுந்தது. அங்குள்ள பிரமாண்ட மசூதி சுனாமி அலையில் இடிந்து தரைமட்டமான வீடியோக்கள் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

பூகம்பம், சுனாமியால் தகவல் தொடர்பு முழுவதும் துண்டிக்கப்பட்டதால், உடனடியாக தகவல்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இந்த பயங்கர பூகம்பத்தில் பலு நகரத்தில் மட்டுமே 500-க்கும் மேற்பட்டோர் பலியானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.  ஏராளமான மக்களைக் காணவில்லை. சுனாமியில் அடித்துச் செல்லப்பட்ட பலரின் சடலங்கள் தொடர்ந்து கரை ஒதுங்குவதால், அந்நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது.

சாலைகளிலும், திறந்தவெளி இடங்களிலும்  சடலங்கள் குவியல் குவியலாக சிதறி கிடக்கின்றன. இடிபாடுகளிலும், சேறு, சகதிகளிலும் குழந்தைகளின் சடலத்துடன் பலர் கதறி அழும் காட்சிகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நிலச்சரிவால் பல பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மின்சாரம் முழுமையாக நிறுத்தப்பட்டதால் மக்கள் இருளில் தவிக்கின்றனர். 

பலரும் மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல், திறந்தவெளியில் வைத்தபடி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். பலு விமான நிலையத்தின் ஓடுபாதைகள் சேதமடைந்துள்ளன. மீட்பு பணிகளுக்காக மட்டும் இங்கு விமானம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அடுத்த மாதம் 4ம் தேதி வரை விமான நிலையம் மூடப்பட்டிருக்கும் என அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான  உதவிகளை உடனே செய்யும்படி இந்தோனேஷிய அதிபர் ஜகோ விடோடோ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். 

மீட்புப் பணியில் ராணுவம் ஈடு்பட்டுள்ளது. பலு நகரம் மட்டுமின்றி டோங்காலா, மமுஜூ ஆகிய நகரங்களிலும் கடல் நீர் புகுந்து கடும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது.

 
இதில் டோங்காலா நகரத்திற்கு செல்லும் சாலைகள் முழுமையாக துண்டிக்கப்பட்டுள்ளதாலும், தகவல் தொடர்பு, மின்சாரம் முடங்கியிருப்பதாலும் மீட்புக்குழுவினரால் அந்நகருக்குள் இதுவரை நுழைய முடியவில்லை.

டோங்காலா மக்கள் கதி என்னவென்றே இதுவரை தெரியவில்லை. அங்கும் நூற்றுக்கணக்கானோர் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இந்தோனேஷிய மீட்புக்குழு மையத்தின் செய்தித் தொடர்பாளர் நுக்ரோஹோ ஜகார்தாவில் நேற்று அளித்த பேட்டியில், ‘‘16 ஆயிரம் பேர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பூகம்பம் ஏற்பட்ட பகுதிக்கு அருகில் உள்ள டோங்காலாவில் இதுவரை மீட்பு குழுவினரால் நுழைய முடியவில்லை. அங்குள்ள நிலைமை எதுவும் தெரியவில்லை’’ என்றார்.

இதற்கிடையே, ஒட்டுமொத்தமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ப…

by Mani Bharathi   on 30 Sep 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.