LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    தமிழ்நாடு-Tamil Nadu Print Friendly and PDF

தமிழில் பெயர்ப் பலகை இல்லாத வணிக நிறுவனங்களின் மின் இணைப்பை துண்டிக்க தொழிலாளர் துறை திட்டம்!

தமிழில் பெயர்ப் பலகை இல்லாத வணிக நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்க தொழிலாளர் துறை திட்டமிட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர்ப்பலகைகள் தமிழில் வைக்க வேண்டும் என்று தொழிற் சட்டம் வலியுறுத்துகிறது.

கடைகள், உணவகங்கள், வணிக நிறுவனங்களின்  பெயர்ப்பலகைகளில் தமிழைத்தவிர ஆங்கிலமோ, பிற மொழியோ இடம்பெற வேண்டும் என விரும்பினால் 5:3:2 என்கிற விகிதத்தில் அமைத்துக் கொள்ளலாம் என சலுகையாக, அனுமதிக்கப்பட்டு உள்ளது.

ஆனால் தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் பெயர்ப்பலகைகள் ஆங்கிலத்தில் மட்டுமே உள்ளன.தமிழில் பெயர்ப்பலகை இல்லாத நிறுவனங்கள் குறித்து, தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகளும், தொழிலாளர் துறை அதிகாரிகளும் ஆய்வு செய்து வருகின்றனர்.

தமிழில் பெயர்ப் பலகை வைக்க ஒரு மாத காலம் அவகாசம் தந்ததோடு, குறைந்த பட்சமாக.ரூ.100 அபராதம் விதித்து வருகின்றனர். ஆனால் ரூ.100 அபராதம் மட்டுமே செலுத்திவிட்டு, பெயர்ப் பலகையை தமிழில் மாற்றாமல் இருந்து வருகின்றனர்.

எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட ஆட்சியர்களை இரு துறைகளும் கூறியுள்ளன.

அதுமட்டுமின்றி, தமிழில் பெயர்ப் பலகை வைக்குமாறு நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

குறிப்பிட்ட காலத்திற்குள், தமிழில் பெயர்ப்பலகை வைக்காத வணிக நிறுவனங்களின் மின் இணைப்பைத் துண்டிக்கலாம் என மாவட்ட ஆட்சியாளர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். இது தொடர்பாக அரசின் ஒப்புதலைக் கேட்டு உள்ளனர்.

அரசின் ஒப்புதல் கிடைத்த பின்பு, தமிழில் பெயர்ப்பலகை இல்லாத வணிக நிறுவனங்களின் மின்சார இணைப்பு துண்டிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

by Mani Bharathi   on 08 Feb 2019  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு பத்திரங்களில் சிறுபிழைகளுக்காக மக்களை அலைக்கழிக்க கூடாது.. சார்பதிவாளர்களுக்கு உத்தரவு
புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து. புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது அரசின் கடமை: உயர்நீதிமன்றம் கருத்து.
கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி. கிடைத்த பொருட்களைக் கொண்டு 15 நாட்களில் மினி ஜீப் வடிவமைத்த தமிழக ‘கிராமத்து விஞ்ஞானி.
விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது. விஜயகாந்த் நினைவிடத்திற்கு உலக சாதனை விருது.
13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு. 13ம் நுாற்றாண்டு கல்வெட்டுகள் கள்ளக்குறிச்சியில் கண்டெடுப்பு.
சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்! சித்திரையை வரவேற்கும் சரக்கொன்றை: ஆச்சரியமான சில தகவல்கள்!
கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை! கோடைவெப்பம் எதிரொலி: தமிழ்நாட்டுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை!
புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின். புத்தகங்களை வாசியுங்கள் - நேசியுங்கள்; பிறர்க்குப் பரிசளித்து வாசிக்க ஊக்கப்படுத்துங்கள்- மு.க.ஸ்டாலின்.
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.