|
||||||||
வட அமெரிக்காவில் கொண்டாடப்பட்ட தந்தை பெரியாரின் 136 வது பிறந்த நாள் |
||||||||
நேற்று (Sep 13th) மெரிலாந்து மாநிலத்தில் எல்க்ரிட்ஜ் நூலகத்தில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. Periyar International of Washington D. C. என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஒவ்வொரு ஆண்டும் பெரியார் பிறந்த நாள் விழா இங்கு கொண்டாடப்படுகிறது. பிற்பகல் 3:30 மணியளவில் வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கத் தலைவி திருமதி கல்பனா மெய்யப்பனின் வரவேற்புரையோடு விழா தொடங்கியது. சிறப்பு விருந்தினராக வருகை தந்த மாண்புமிகு பாரிஸ் கிளிடென்னிங் (Hon. Parris Glendenning, Ex-Governor) (முன்னாள் மேரிலாந்து மாநில ஆளுநர்) பெண்களின் சம உரிமைகள் குறித்து ஒரு அருமையான சொற்பொழிவாற்றினார். திரு. ஹேமந்து மேத்தா (Mr. Hemant Mehta from Secular Student Alliance) கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை அமெரிக்கச் சமூகம் எப்படி நடத்துகிறது என்பதை விளக்கி உரையாற்றினார்கள். பின்பு கேள்வி நேரத்தில் பல வினாக்கள் எழுப்பப்பட்டு விளக்கங்கள் அளிக்கப்பட்டது. பிறகு உள்ளூர் நண்பர்கள் பெரியார் குறித்த வினாக்களை வந்திருந்தவர்களிடம் கேட்கப்பட்டது. அதன்பின்பு அந்தக் கேள்விக்குறிய விளக்கங்களை நமது நண்பர்கள் ஒரு குறுவுரையாக எடுத்துரைத்தார்கள். 1. மருத்துவர் சரோஜா இளங்கோவன் பெண்ணுரிமைக்காக தந்தை பெரியார் சொன்ன புரட்சிகரமான கருத்துகளை எடுத்து விளக்கினார்கள். 2. முனைவர் சொர்ணம் சங்கர் பெரியாரின் வைக்கம் போராட்டத்தை விளக்கி ஒரு உரையாற்றினார். 3. முனைவர் அரசு செல்லைய்யா பெரியாரின் பகுத்தறிவு சிந்தனை குறித்து விளக்கமாக எடுத்துரைத்தார். 4. மருத்துவர் சோம இளங்கோவன் தீண்டாமை/சாதி ஒழிப்புக்கு பெரியார் ஆற்றிய தொண்டுகளை எடுத்துக் கூறினார். 5. தந்தை பெரியாரின் மறுமலர்ச்சி சிந்தனைகள் மற்றும் பகுத்தறிவு தத்துவம் போன்றவை பொதுமக்களை சென்றடைய நாம் என்ன செய்ய வேண்டுமென சில புதிய கருத்துகளை ச. பார்த்தசாரதி விளக்கினார். திரு. சுந்தர் குப்புசாமி இந்த நிகழ்ச்சியை நெறிப்படுத்தி கொடுத்தார். திரு. கொழந்தவேல் இராமசாமி மற்றும் நாஞ்சில் பீற்றர் இருவரும் இந்த நிகழ்ச்சியை அமைத்து கொடுத்தனர். நன்றிவுரையோடு கூட்டம் 5:45 மணிக்கு முடிவுற்றது. |
||||||||
periyar1 | ||||||||
by Swathi on 16 Sep 2014 0 Comments | ||||||||
Tags: தந்தை பெரியார் Thanthai Periyar Periyar Birthday Celebration | ||||||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|