LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    வலைத்தமிழ் நிகழ்வுகள் Print Friendly and PDF

தமிழை ஐநா சபை, யுனெசுகோ ஆகியவற்றில் கொண்டுசென்று அணைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும்- வலைத்தமிழ் சா. பார்த்தசாரதி வேண்டுகோள்.

சென்னையில் 9-01-2024 மற்றும் 10- 1 -2024 இரண்டு நாட்கள் "ஓட்டல் லீ மெரிடியன்" -ல் 10வது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளின் குடியரசுத் தலைவர் மற்றும் பிரதமர் அமைச்சர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு முக்கிய விருந்தினர்கள்.....

 

 குறிப்பாக வேலூர் தொழில்நுட்ப பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் ஜி விஸ்வநாதன் அவர்களும் டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழக வேந்தர் திரு ஏசி சண்முகம் அவர்களும் பிரபல தொழிலதிபர்கள் விஜி சந்தோஷம் மற்றும் பழனி பெரியசாமி அவர்கள் உள்ளிட்ட பல்வேறு நபர்களும் பங்கேற்று மாநாட்டை சிறப்பித்தனர்.

 

தமிழக அரசின் அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு துரைமுருகன் அவர்களும், மாண்புமிகு செஞ்சி மஸ்தான் அவர்களும், உயர் நீதிமன்ற நீதியரசர் திரு வள்ளிநாயகம் அவர்கள் உள்ளிட்ட நீதிபதிகளும், உச்சநீதிமன்ற வழக்கறிஞர்களும் பொருளாதார மேதைகளும் சுமார் 16 தலைப்புகளில் சுமார் 85க்கும் மேற்பட்டோர் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களின் பொருளாதார மேம்பாட்டுக்கான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர்.

 

வலைத்தமிழ் ஆசிரியர் ச. பார்த்தசாரதிபேச்சு 

இதில் ஜனவரி 10-ம் தேதி நடைபெற்ற உலகப் பொருளாதார மாநாட்டில் பாத்தாவது அமர்வில் வலைத்தமிழ் ச. பார்த்தசாரதி பேசினார். அப்போது அவர், "தமிழை உலக மொழியாக ஐநா சபை, யுனெசுகோ ஆகியவற்றில் கொண்டுசென்று அனைத்து மொழிகளிலும் திருக்குறளை மொழிபெயர்க்க வேண்டும்" என்றார்.

 

தொடர்ந்து அவர் பேசும்போது, "தமிழ் உலகளாவிய மொழியாக மாறுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்ற அமர்வை இந்த நிகழ்ச்சியில் சேர்த்தமைக்கு நன்றி. காரணம் இது மாதிரியான உலகளாவிய மிகப்பெரிய மாநாடுகளை நட்சத்திர விடுதிகளில் நடத்தும் போது அங்கே தமிழ் என்பது கூட ஆங்கிலத்தில் உச்சரிக்கப்பட்டு தமிழ் சார்ந்த வளர்ச்சியை நாம் சிறிது தள்ளி வைக்கக் கூடிய நிலையை பல இடங்களில் காண முடிகிறது.

 

தொழில் அதிபர்கள் முன்னெடுக்க வேண்டிய ஒரு மொழி

தமிழ் என்பது தொழில் அதிபர்கள் முன்னெடுக்க வேண்டிய ஒரு மொழி. உலகத்தில் முதன்மையாக பொருளாதாரத்திலும், கல்வியிலும், சிந்தனையிலும், வளர்ச்சியிலும் மேம்பட்டவர்கள் முன்னெடுக்கும்போது மட்டுமே அந்த மொழி எழுந்து நிற்கும்.  தமிழ் சமூகத்தை இயக்குவதற்கு ஐந்து பேர் தேவை என நான் கருதுகிறேன். ஒன்று தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்கள், எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள், சித்தர்கள், தொழிலதிபர்கள் ஆகிய இந்த 5 பேர் தான் சமூகத்தை வழிநடத்துகிறார்கள். 

இவர்களை நம்பித்தான் ஒட்டுமொத்த மக்களும் உள்ளனர். அதனால், இந்த தொழிலதிபர்களும், வணிக சமூகமும் தமிழை பேச வேண்டும். உலகம் முழுவதும் பயணித்து பல்வேறு மேடைகளில் உரையாற்றும் போது பல்வேறு முன்னணி நிறுவனங்களின் சிஇஓ-க்களை சந்திக்கிற வாய்ப்பு கிடைத்தது. அப்போதெல்லாம் அவர்கள் என்னிடம் உங்கள் தொழிலை மட்டும் நீங்கள் பார்க்க வேண்டியதுதானே? ஏன் தமிழ், தமிழ் என்று ஓடிக்கொண்டிருக்கிறீர்கள் என கேட்கிறார்கள்.

அப்படி அல்ல ஏதோ ஒரு காரணம் என்னை இன்னும் தமிழின்பால் ஈர்த்துக் கொண்டிருக்கிறது. இன்றைய தலைமுறைகளிடம் தமிழ் எப்படி தன்னுடைய வலிமையை தெரியப்படுத்துகிறது என்றால் google வழியாக சில வணிக நிறுவனங்கள் இந்தியாவிற்குள் நுழைந்தபோது அவர்கள் ஆங்கிலத்தையும் இந்தியையும் நம்பி வணிகத்தை நிலை நிறுத்தி விடலாம் என நினைத்தார்கள்.

 

கூகுள் தமிழ் என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள்

ஆனால், அவர்களால் அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. பிறகு இந்த தோல்விக்கு காரணம் என்ன என்று அவர்கள் ஆராய்ந்த போதுதான் இந்தியாவில் ஆங்கிலத்தையும் இந்தியையும் மக்கள் குறைவாக பயன்படுத்துகிறார்கள் என்பது அப்போது தெரிய வந்தது. அதற்கான காரணமும் தெரிய வந்தது. அதாவது தமிழகத்தில் தமிழையும், கர்நாடகத்தில் கன்னடத்தையும் பயன்படுத்துவது போல அந்தந்த மாநிலங்களில் உள்ள மொழியை மட்டுமே மக்கள் முதன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவந்தது.

 

அதன்பிறகு தான் கூகுள் தமிழ் என்ற ஒன்றை கொண்டு வந்தார்கள். ஆகவே நீங்கள் எங்கு சென்றாலும் தமிழை பயன்படுத்துங்கள். வங்கிக்கு சென்றாலும் தமிழை பயன்படுத்துங்கள். நீங்கள் கோடிகளில் புரளுகிற வணிகர் என்றாலும் தமிழை பயன்படுத்துங்கள். தமிழர்களை நேரில் சந்திக்கிற பொழுது தமிழில் பேசுங்கள். தமிழில் பேசுவது என்பது அவமானம் அல்ல அது நம் அடையாளம்.

 

உலகத்தில் தமிழை விட வேறென்ன அடையாளம் நமக்கு கிடைத்து விடப் போகிறது. உலகத்தில் எத்தனையோ மொழிகள் பேசுகிறார்கள். ஆனால், அதற்கான எழுத்துக்கள் இல்லாமல் போயிருக்கிறது. ஆனால், தமிழ் அப்படி அல்ல. தமிழ் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. 2018-ல் எனக்குள் எழுந்த  ஒரு கேள்வி இதுவரை எத்தனை மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது என்பது எனக்குள் எந்த கேள்வியாக இருந்தது.

 

எனது கேள்வி குறித்த சந்தேகங்களை முகநூலில் பதிவு செய்தேன்.  அதற்காக ஒரு குழு 2019-ல் அமைக்கப்பட்டது.

அந்த குழு சார்பில் தன்னாலான அனைத்து வழிகளிலும் தகவல்கள் திரட்டப்பட்டன. அதன் அடிப்படையில் எத்தனை மொழிகளில் திருக்குறள் புத்தகங்கள் வெளிவந்திருக்கிறது என்பதை குறித்து ஆங்கிலத்தில் ஒரு விரிவான புத்தகத்தை வெளியிட இருக்கிறோம். அந்த புத்தகத்தில், இன்னும் எத்தனை மொழிகளில் திருக்குறளை மொழி பெயர்க்க வேண்டும். ஐநாவில் எத்தனை மொழிகள் இருக்கிறது. யுனெஸ்கோவில் எத்தனை மொழிகள் இருக்கிறது, இன்னும் எத்தனை நாடுகளில் திருக்குறள் சென்று சேர வேண்டும், எத்தனை நாடுகளில் சென்று சேர்ந்திருக்கிறது, எத்தனை மொழிகளில் மொழி பெயர்க்க வேண்டும் என்பது குறித்து அத்தனை தகவல்களையும் அந்த புத்தகத்தில் நாங்கள் கொடுத்திருக்கிறோம்.

 

அந்தப் புத்தகத்தில் தமிழை குறித்து குறிப்பிடும் போது அதை இந்திய மொழி என்று குறிப்பிடுவதா அல்லது உலக மொழி என்று குறிப்பிடுவதா என சந்தேகம் வலுத்தது. தமிழ் இந்திய மொழிகளில் ஒன்று. ஆனால் இந்தியாவிற்கு வெளியே பல நாடுகளில் பேசப்படுவதால் அது உலக மொழி.  

தமிழ் தொழில்களை இணைக்க  www.TamilBusinessWorld.com என்ற  என்ற இணையதளத்தை உருவாக்கி அதில் உலகம் முழுவதும் உள்ள 2000-க்கும் மேற்பட்ட தமிழ் தொழில்களை அதில் இணைத்துள்ளோம். விரைவில் உலகம் முழுவதும் உள்ள தமிழ் தொழிலதிபர்களை இதில் இணைக்கும் முயற்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

 

ஐநா சபையில்  உள்ள ஆறு மொழிகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. திருக்குறள் தான் ஒரு சாவி ஏன் திருக்குறளை மீண்டும் மீண்டும் நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றால் உலகம் வியந்த திருக்குறளை கையில் எடுத்துக் கொண்டு. தொழிலும் இலக்கியமும் திருக்குறளும் ஒன்றிணைந்து கொலோச்சி நிற்கிறபோது உலகம் தமிழையும், திருக்குறளையும் ஏற்றுக் கொள்ளும் நிலை வரும் என்பதை நாம் நம்புவோம். யுனெஸ்கோவில் உள்ள 135 நாடுகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

 

உலக தமிழ் மக்களை ஒன்றாக இணைக்கும் முயற்சி

இன்னும் 72 நாடுகளில் திருக்குறள் மொழி பெயர்க்கப்பட வேண்டும். தமிழ்நாடு பாண்டிச்சேரி உட்பட 40 மாவட்டங்களில் 80 ஆயிரம் திருக்குறள் புத்தகங்களை விநியோகிக்க வேண்டும் என்பதே எங்களுடைய இலக்காக இருந்தது. தற்போது 40 ஆயிரம் திருக்குறள் புத்தகங்களை உலகத் தமிழ் வளர்ச்சி மன்றத்துடன் இணைந்து நாங்கள் வழங்கியிருக்கிறோம். தமிழை தமிழாய் பேசுவோம், உலகத் தமிழ் பெயர்களின் பேரியக்கம், உலக திருக்குறள் முற்றோதல் இயக்கம், வணிகத்  தமிழ் பெயர்கள் இயக்கம் ஆகிய நான்கு பேரியக்கங்களை கட்டி இந்த பணிகளை நாங்கள் செவ்வனே செய்து வருகிறோம்.

 

 இது மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள அனைத்து தமிழ் மக்களையும் ஒன்றாக இணைக்கும் முயற்சியில் வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் வெளியிடப்பட்டு ஒவ்வொரு நாடுகளிலும் உள்ள தமிழர்களுக்கு கொண்டு சேர்க்கும் உன்னதப் பணியை மீண்டும் தொடங்கி இருக்கிறோம் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

by Kumar   on 17 Jan 2024  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
வலைத்தமிழ் கல்விக்கழகம் சார்பில் இணையவழி இசை பயின்ற இசைக்குயில்களின் மார்கழி அரங்கேற்றம் வலைத்தமிழ் கல்விக்கழகம் சார்பில் இணையவழி இசை பயின்ற இசைக்குயில்களின் மார்கழி அரங்கேற்றம்
வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி. வலைத்தமிழில் முனைவர் மருதநாயகதின் முதல் காணொலி.
சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் நூல்களைப் பெற estore.valaitamil.com தொடங்கப்பட்டுள்ளது சூட்டி மகிழ்வோம் தூய தமிழ்ப்பெயர்கள் நூல்களைப் பெற estore.valaitamil.com தொடங்கப்பட்டுள்ளது
சித்தமருத்துவ மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவிக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தியுள்ளது SiddhaMD அமைப்பு சித்தமருத்துவ மருத்துவர்களுக்கு தொழில்நுட்ப உதவிக்கு சிறப்புக் குழு ஏற்படுத்தியுள்ளது SiddhaMD அமைப்பு
தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு.. தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் புதிய இயக்குநருடன் வலைத்தமிழ் கல்விக்கழக நிறுவனர் சந்திப்பு..
நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு நியூஜெர்சியில் வள்ளலார் திருவருட்பா இசைப் பயிற்சி நூல் வெளியீடு
டிசம்பர் 28, சென்னை தி.நகரில் நடந்த மார்கழி இசைவிழாவில்  வலைத்தமிழ் கல்விக்கழகத்தின்  ஐந்து பாட நூல்களும் காணொளி களும் வெளியீடு டிசம்பர் 28, சென்னை தி.நகரில் நடந்த மார்கழி இசைவிழாவில் வலைத்தமிழ் கல்விக்கழகத்தின் ஐந்து பாட நூல்களும் காணொளி களும் வெளியீடு
வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3 வட அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர்கள் கூடல் -3
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.