திருமணத்திற்கு பிறகு சினிமாவில் தலை காட்டாமல் இருந்த ஜோதிகா, மலையாளத்தில் வெளியாகி ஹிட்டான “ஹவ் ஓல்ட் ஆர் யூ” கதை பிடித்திருந்ததால் அதில் நடிக்க ஒப்புக் கொண்டு... மீண்டும் சினிமாவுக்கு ரீ என்ட்ரி கொடுத்தார்.
இந்த படத்தை மலையாளத்தில் இயக்கிய ரோஷன் ஆண்ட்ரூஸே தமிழிலும் இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். பெண்களை மையப்படுத்தி உருவாகி உள்ள இந்த படத்தை ஜோதிகாவின் கணவர் நடிகர் சூர்யாவே தயாரிக்கிறார்.
படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்துக்கு இதுவரை பெயர் சூட்டாமல் இருந்தனர். இந்நிலையில் நேற்று படத்திற்கு 36 வயதினிலே என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சூர்யா தெரிவித்துள்ளார். மேலும், இப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை நடிகர் சூர்யா நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.
அனேகமாக படம் கோடை விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
|