|
|||||
சூரியனுக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்ட சூப்பர் பூமி! |
|||||
சூரியனுக்கு அருகில் ‘சூப்பர் பூமி’ ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து உள்ளனர். விண்வெளியில் 6 ஒலி ஆண்டுகள் தொலைவில் உள்ள ‘பர்நார்ட்’ என்ற நட்சத்திரத்தை வானவியல் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வந்தனர். இது சூரியனுக்கு மிக அருகில் உள்ள சிறிய நட்சத்திரம் ஆகும். இந்த நட்சத்திரத்தை ஒரு கிரகம் சுற்றிக் கொண்டிருப்பதை விஞ்ஞானிகள் தற்போது கண்டுபிடித்து உள்ளனர். இதற்கு ‘பர்நார்ட் நட்சத்திரம் பி’ என பெயர் வைத்துள்ளனர். இது, ‘சூப்பர் பூமி’ என்றும் அழைக்கப்படுகிறது. இது பூமியை விட 3.2 மடங்கு பெரியது. சூரிய குடும்பத்துக்கு வெளியே பூமிக்கு அருகே இருக்கும் 2வது கிரகமாக இது அறியப்படுகிறது. இந்த கிரகம் பர்நார்ட் நட்சத்திரத்தை 233 நாட்களுக்கு ஒரு முறை சுற்றி வருகிறது. சூரியனில் இருந்து பூமி பெறும் சக்தியில் 2 சதவீதத்தை மட்டுமே, இந்த புதிய கிரகம் தனது நட்சத்திரத்திடம் இருந்து பெறுகிறது. இதனால், இந்த கிரகத்தில் மைனஸ் 170 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளது. இது பற்றி ஸ்பெயின் விஞ்ஞானி இக்னாசி, ‘‘உறைநிலையில் இந்த கிரகம் இருக்கும் என்பதால், தண்ணீர் இருப்பதற்கும், உயிரினங்கள் வாழ்வதற்கும் சாத்தியம் இல்லை. புதிய கிரகம் எப்படி இருக்கும் என்பது பற்றிய தகவல்கள் எல்லாமே, யூக அடிப்படையில் உள்ளன’’ என கூறி உள்ளார். இவரது தலைமையிலான குழு, 7 தொலைநோக்கிகள் மூலம் விண்வெளியை கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக ஆராய்ந்து வருகிறது. இவர்கள்தான் இந்த சூப்பர் பூமியை கண்டுபிடித்து உள்ளனர். |
|||||
by Mani Bharathi on 17 Nov 2018 0 Comments | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|