|
|||||
விரைவில் தயாராக இருக்கும் சதுரங்க வேட்டை பார்ட்-2 !! |
|||||
கடந்த ஜூலை மாதம் வெளியாகி வசூலை வாரிக் குவித்த படங்களில் சதுரங்க வேட்டையும் ஒன்று. மக்களின் அன்றாட வாழ்வில் சந்தித்து வந்த ஒவ்வொரு மோசடியும் மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படத்தில், ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நட்ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வினோத் என்ற புதுமுக இயக்குநர் இந்த படத்தை இயக்கி உள்ளார். இந்த வருடத்தில் வெளிவந்த படங்களில் மிக முக்கியமான படமாக கருதப்படும் 'சதுரங்கை வேட்டை' படத்தை நடிகர், இயக்குநர் மனோபாலா தயாரித்தார். இப்படத்தின் இசைவெளியீட்டுவிழாவில் திரையிடப்பட்ட டிரெய்லரை பார்த்த திரையுலக பிரமுகர்கள் படத்தைப் பாராட்டித் தள்ளினார்கள். அதை வைத்து சதுரங்க வேட்டை படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிட்டு வசூலை வாரிக்குவித்தது. சதுரங்க வேட்டை படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இயக்குநர் வினோத், தற்போது மூன்று கதைகளை தயார் செய்து வைத்திருக்கிறாராம். அதில் ஒரு கதை 'சதுரங்க வேட்டை'யின் இரண்டாம் பாகமாம். முதல் பாகத்தின் தொடர்ச்சியாகவும், அதைவிட சுவாரஸ்யமாகவும் அப்படத்தின் திரைக்கதையை உருவாக்கி வருகிறாராம் வினோத். சதுரங்க வேட்டை பார்ட் -2வில் முன்னணி கதாநாயகன் ஒருவரை நடிக்க வைக்க திட்டமிட்டு இருக்கிறார்களாம் படத் தயாரிப்பு குழுவினர். |
|||||
by Swathi on 25 Sep 2014 0 Comments | |||||
Tags: சதுரங்க வேட்டை சதுரங்க வேட்டை பார்ட் 2 Sathuranga Vettai Sathuranga Vettai Part 2 | |||||
கருத்துகள் | |
|
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய | ||
|