LOGO
  முதல் பக்கம்    செய்திகள்    உலகம்-World Print Friendly and PDF

ரஷ்யா- இந்தியா ஒப்பந்தம்: சீனா- பாகிஸ்தான் பீதி!

ரஷ்யாவுடன், இந்தியா  ராணுவ தளவாட ஒப்பந்தம் செய்வதன் மூலம் இந்தியாவின் ராணுவ பலம் அதிகரிப்பது, அண்டை நாடுகளான, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

உலகிலேயே, அதிக அளவு ராணுவத் தளவாடங்களை வாங்கும் நாடுகளில், இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவும், சிறப்பான முறையில் உள்ளது. 

அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் ராணுவ உறவுக்கு, இந்தியா எப்போதும் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.  அதிக அளவு ஆயுதம் வாங்கும் நாடுகளில், அமெரிக்கா இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில், ரஷ்யா விடம் இருந்து தான், அதிக அளவு ஆயுதங்கள் வாங்கப்படுகின்றன.

இந்த நிலையில், ரஷ்யாவிடமிருந்து, எஸ் -400 ரக ஏவுகணைகள் உள்ளிட்ட, பல்வேறு ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் வாங்குவதற்கு, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 

இந்தியா, ரஷ்யா இடையேயான ஒப்பந்தங்கள் தொடர்பாக, இரு தரப்பும், ஒவ்வொரு ஆண்டும் சந்தித்து பேசுகின்றன. அதன்படி, இந்த ஆண்டுக்கான இரு தரப்பு பேச்சில் பங்கேற்க, ரஷ்ய அதிபர், விளாடிமிர் புடின், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்தார்.

இதில், ஆயுதங்கள் வாங்குவதற்கான, பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. இந்த ஒப்பந்தம், மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இது, சர்வதேச அளவில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளதால், பல்வேறு நாடுகள் மிகவும் ஆர்வத்துடன், இதை கூர்ந்து கவனித்து வருகின்றன.

'ரஷ்யாவுடன் ராணுவ ஒப்பந்தம் செய்தால், பொருளாதார தடை விதிக்கப் படும்' என அமெரிக்கா ஏற்கனவே எச்சரித்து உள்ளது. சமீபத்தில், ரஷ்யாவிடம் இருந்து, எஸ்- 400 ஏவுகணைகள் வாங்க, ஒப்பந்தம் செய்ததால், சீனா மீது பொருளாதார தடையை, அமெரிக்கா விதித்தது

தற்போது, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்ய உள்ளதால், இந்தியா மீதும் பொருளாதார தடையை, அமெரிக்கா விதிக்குமா... என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த ஒப்பந்தம் தொடர்பாக, அமெரிக்காவிடம், தன் நிலைப்பாட்டை மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது. சமீபத்தில், இந்தியா மற்றும் அமெரிக்காவின் ராணுவ மற்றும் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு நடந்தது. அப்போது, ரஷ்யாவுடன் ஒப்பந்தம் செய்வது குறித்து, மத்திய அரசு, தன் நிலை மற்றும் தேவையை உறுதியுடன் தெரிவித்து உள்ளது

சீனா, தொடர்ந்து வளர்ச்சி அடைவதை, அமெரிக்கா விரும்பவில்லை. அதனால், இந்தியாவுக்கு அதிக ஆதரவு தெரிவித்து வருகிறது. அதனால், இந்த ஒப்பந்தத்தை எதிர்க்க அமெரிக்கா விரும்பவில்லை.  இதற்காகவே பொருளாதார தடை விதிக்கும் சட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு விலக்கு அளிப்பதற்கான மசோதாவை தாக்கல் செய்வது குறித்து, அமெரிக்கா விவாதித்து வருகிறது.

இந்த நிலையில், ஒரே நேரத்தில், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுடன், இந்தியாவின் நட்புறவு வேகமாக வளர்ந்து வருவது, அண்டை நாடுகளான, சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளன.

ஆசிய பிராந்தியத்தில் மிகப் பெரிய சக்தியாக வளர்ந்து வரும் சீனாவுக்கும், தொடர்ந்து தாக்குதல்களை நடத்திவரும் பாகிஸ்தானுக்கும், இந்த ஒப்பந்தம் செய்யப்படுவது, மிகப் பெரிய பீதியை ஏற்படுத்தி உள்ளது.

by Mani Bharathi   on 05 Oct 2018  0 Comments
 தொடர்புடையவை-Related Articles
பஹ்ரைன்  நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து  ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி! பஹ்ரைன் நாட்டில் இந்தியன் பள்ளி தமிழ் மாணவர்கள் சி.பி.எஸ்.சி தேர்வில் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக 100% தேர்ச்சி!
86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு. 86 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள புதிய கோளில் தண்ணீர் இருப்பது கண்டுபிடிப்பு.
75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு. 75 ஆயிரம் ஆண்டு பழமையான மண்டை ஓடு மூலம் பெண்ணின் முகம் வடிவமைப்பு.
விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம். விதிகளை மீறிய 2 கோடி வாட்ஸ்அப் கணக்கு முடக்கம்.
செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா. செவ்வாயில் உயிர்களைத் தேடும் நாசா.
14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல். 14 கோடி மைல் தூரத்திலிருந்து பூமிக்கு வந்த லேசர் சிக்னல்.
எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல். எரிமலை வெடிப்பு எதிரொலி-இந்தோனேசியாவில் சர்வதேச விமான நிலையங்கள் மூடல்.
இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத வகையில்... விண்வெளியில் ராட்சத கருந்துளை கண்டுபிடிப்பு
கருத்துகள்
No Comments found.
உங்கள் கருத்துகள் பதிவு செய்ய
பெயர் *
இமெயில் *
கருத்து *

(Maximum characters: 1000)   You have characters left.
Write reCAPTCHA code *
 
இயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.
முக்கிய குறிப்பு:

வலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள்.  பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற  இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.