தேவையானவை :
1. சுத்தம் செய்த முடக்கத்தான் கீரை - 1 கப்
2. நல்லெண்ணெய் - தேவையான அளவு
3. மிளகாய் வற்றல் - 6 (தேவைகேற்ப சேர்த்துக் கொள்ளலாம்)
4. கடுகு, உளுத்தம் பருப்பு - சிறிதளவு
5. புளி - எலுமிச்சை பழ அளவு
6. உப்பு - தேவைகேற்ப
செய்முறை :
1. வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயை நன்கு வறுத்துக் கொள்ளவும்.
2. அதனுடன் புளியையும், சுத்தம் செய்த கீரையையும் சேர்த்து, நன்கு வதக்கி எடுத்து அரைத்தால் கமகமக்கும் துவையல் தயார்.
3. இந்த துவையலை மிக்சியில் அரைப்பதை விட, அம்மிக்கல்லில் அரைத்தால் கூடுதல் சுவை இருக்கும்.
4. குறைந்தது மூன்று நாட்கள் வரை முடக்கத்தான் கீரை துவையலை வைத்து சாப்பிடலாம்.
முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்களை தெரிந்து கொள்ள : http://www.valaitamil.com/mudakathan-keerai-health-benefits_14146.html
|