நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் உருவாக்கி, மாபெரும் வெற்றி பெற்ற ராஜபார்ட் ரங்கத்துரை படம் தற்போது டிஜிடல் மயமாகிறது.
கடந்த 1973-ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தை பி.மாதவன் என்பவர் இயக்கியிருந்தார். உஷா நந்தினி, நம்பியார், மனோரமா, வி.கே.ராமசாமி, டி.கே.பகவதி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்திருந்த இப்படத்தை வி.சி.குகநாதன் தயாரித்திருந்தார்.
இந்த படம் வெளியான காலக்கட்டத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றதுடன், பாடல்களும் பெரிய அளவில் ஹிட்டாகின. ராஜபார்ட் ரங்கதுரை படத்தை அபி சினி ஆர்ட்ஸ் நிறுவனம் டிஜிட்டலில் மெருகூட்டி வருகிறது. அனேகமாக அடுத்த மாதம் படத்தை வெளியிடுவார்கள் என தெரிகிறது.
|