கத்தி படத்தை தொடர்ந்து நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கத்தில் புலி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய்யுடன் சேர்ந்து, ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீ தேவி, சுதீப் என பலர் நடித்து வருகின்றனர்.
பேன்டசி வகை கதைக் கொண்ட இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த படத்தின் படபிடிப்பு வரும் ஏப்ரல் முதல்வாரத்தில் முடிவடைகிறதாம். படத்தின் முதல் தோற்ற டீசரை விரைவில் வெளியிட ஏற்பாடு செய்து வருகிறார்கள். படபிடிப்பு முடிந்ததும் டப்பிங், கிராபிக்ஸ், அனிமேஷன் என அனைத்து வேலைகளையும் முடித்து மே இறுதிக்குள் படத்தை வெளியிடவிருக்கிறார்களாம் படக்குழுவினர்.
|