2015 ம் ஆண்டில் கூகுள் தேடலில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 இந்திய படங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் ‘ஐ’ மற்றும் ‘புலி' ஆகிய தமிழ் படங்கள் இடம் பெற்றுள்ளன.
முதலிடத்தில் ராஜமௌலியின் பாகுபலி ,தொடர்ந்து 2. பஜ்ராங்கி பாய்ஜான் 3. பிரேம் ரத்தன் தான் பயோ, 4. ஏபிசிடி 2, 5. ஐ, 6. பிகே. 7. புலி 8.ராய் 9.ஹமாரி அதூரி கஹானி 10. ஸ்ரீமந்துடு ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளன. அதிகம் தேடப்பட்ட பொதுவான விஷயமாக பாகுபலி முதலிடத்தில் இருக்கிறது மேலும் பாகுபலியால் எப்போது முதலிடம் வகிக்கும் சல்மான்கானின் படங்கள் பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பட்டியலில், விக்ரமின் ஐ படம் ஐந்தாம் இடத்திலும் விஜய்யின் புலி ஏழாம் இடத்திலும் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
|