பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட் மிடில்டனுக்கு நேற்று ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேட் மிடில்டன், கடந்த வாரம் பிரசவத்திற்காக, லண்டனில் உள்ள செயின்ட் மேரீஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று காலை முதலே பிரசவ வழியால் துடித்த கேட் மிடில்டனுக்கு நேற்று மாலை 4.24 மணிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதை அரண்மனை வட்டாரங்களும் உறுதிபடுத்தியுள்ளன. இங்கிலாந்து அரண்மனைக்கு புதிய வாரிசு கிடைத்துள்ளதை அடுத்து, இங்கிலாந்து நாட்டு மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். வில்லியம்ஸ் மற்றும் கேட் மிடில்டன் தம்பதியினருக்கு அதிபர் ஒபாமா உட்பட பல நாட்டுத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
|